எங்களைப் பற்றி

நாம் யார்

ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷன் சர்வீசஸ் (“ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷன்அல்லது “RTS”) தொழில்முறை மொழிச் சேவை வழங்கும் நிறுவனமாக, தாமஸ் ஸ்டாம்ஃபோர்டு ரேஃபிள்ஸ் 1819-ஆம் ஆண்டு நவீன சிங்கப்பூரை நிர்மாணித்து 180ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக அன்னாரது பெயருடன் 1999-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. எமது வாடிக்கையாளர்களான ரேஃபிள்ஸ் ஹோட்டல், ரேஃபிள்ஸ் ஹாஸ்பிடல், ரேஃபிள்ஸ் கிளப் போலவே எமது நிறுவனத்துக்கும் பெயர் சூட்டிக்கொண்டோம். ஏனென்றால், சிங்கப்பூரில் ரேஃபிள்ஸ் என்ற பெயர் உயர்வு, தரம், முதல் வரிசை என்பதன் அடையாளமாகத் திகழ்கிறது.

கடந்த இருபதாண்டுகள் காலமாக, எங்கள் தொலைநோக்கு மற்றும் இலட்சியத்தை மனதிற்கொண்டு, உலகத்தரம் வாய்ந்த மொழிபெயர்ப்பு நிறுவனமாகத் திகழ விரும்பும் அந்த உயர்ந்த இலட்சியத்தை அடைய வேண்டி எங்களது செறிந்த விழுமங்களை தலைமேற்தாங்கி செயற்படுத்தி வருகிறோம்.

மொழிபெயர்ப்புத் துறையில் தலைசிறந்த குழுவாகப் பணியாற்றும் நாங்கள், மலாய் மொழி, தமிழ்மொழி, இந்தோனேஷிய மொழி, டாகலாக் மொழி, வியட்நாம் மொழி, பர்மிய மொழி, வங்காள மொழி, தாய்லாந்து மொழி, கம்போடிய மொழி, லாவோஸ் மொழி, ஜப்பானிய மொழி, கொரிய மொழி மற்றும் சீன மொழி ஆகிய ஆசிய மொழிகளிலும், ஜெர்மானிய மொழி, பிரெஞ்சு மொழி, இத்தாலிய மொழி, ஸ்பானிய மொழி, போர்த்துகீசியமொழி, டேனிஷ் மொழி, டச்சு மொழி, இரஷ்யமொழி, உக்ரேனிய மொழி, கிரேக்க மொழி, துருக்கிய மொழி, நார்வேஜிய மொழி, பிஃன்லாந்து மொழி, இலத்தீன் மொழி, போலந்து மொழி, லாட்விய மொழி, குரோஷிய மொழி, செக் மொழி, அயர்லாந்து மொழி மற்றும் பிற ஐரோப்பிய மொழிகளிலும் தரமான மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துப் பொருளுணர்த்தும் சேவைகளை வழங்குகிறோம்.

மொழிபெயர்ப்புகள் ( நிதியியல் மொழிபெயர்ப்பு, சட்ட மொழிபெயர்ப்பு, உயிர் அறிவியல் மொழிபெயர்ப்பு, தொழில்துறை மொழிபெயர்ப்பு, வர்த்தக மொழிபெயர்ப்பு, வான்வழி/கப்பற்போக்குவரத்து மொழிபெயர்ப்புசீன இலக்கிய மொழிபெயர்ப்புசான்றிதழ்பெற்ற மொழிபெயர்ப்பு ), மொழிபெயர்த்துப் பொருளுணர்த்தும் சேவை, இணையத்தள உள்ளூர்மொழியாக்கம், திருத்துதல், படிதிருத்துதல், விளம்பரம், டி.டி,பி. (அச்சுக்கோர்ப்பு)உரையாடல் மொழிபெயர்ப்பு  ஆகியவற்றுள் பெரிய அல்லது சிறிய திட்டப்பணி ஓவ்வொன்றுக்கும் நாங்கள் அந்தந்த நாட்டிற்கென ஒரு குழுவை அமைத்துள்ளோம்

அங்கீகாரம்பெற்ற முழுநேரப் பணியாற்றுகின்ற, தாய்மொழியில் மொழிபெயர்க்கின்ற, எங்களுடைய அனைத்து மொழிபெயர்ப்பாளர்களும்/ பொருளுணர்த்துனர்களும் குறிப்பிட்ட கல்வித்துறையில் சிறப்புப்பயிற்சி பெற்றவர்கள் ஆவர். எந்த வகையான ஆவணத்தை அல்லது தரவை நீங்கள் மொழிபெயர்க்க விரும்பினாலும், உங்களுடைய குறிப்பிட்டத் தேவைகளை நிறைவுசெய்யும் விதத்தில் ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷன் எப்போதுமே வாடிக்கையாளரின் விருப்பத்துக்கேற்றச் சேவையை வழங்கக்கூடிய ஆற்றலைப் பெற்றுள்ளது.

ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷனை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்றால் நீங்கள் வேறெங்கும் பெறமுடியாத உன்னதமானத் தரத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று பொருளாகும். நிருபிக்கப்பட்ட, நம்பகமான எங்கள் அமைப்பின் மூலமாக இதற்கான உறுதி உங்களுக்கு அளிக்கப்படுகிறது. ஓர் இலவச விலைப்புள்ளியைப் பெற இங்கே கிளிக் செய்யவும், பின்னர், எங்களுடைய அங்கீகாரம்பெற்ற, அனுபவம் வாய்ந்த வல்லுநர் குழுவிடம் இருந்து திறம்பட்ட மொழிபெயர்ப்பைப் பெறுவதை எதிர்நோக்கியிருங்கள்.

எங்களது தொலைநோக்கு

உலகம் முழுவதும் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் தேவைக்கேற்ப வாடிக்கையாளரின் விருப்பத்துக்கேற்ற, மதிப்பு கூட்டப்பட்ட, மொழிபெயர்ப்பு, மொழிபெயர்த்துப் பொருளுணர்த்தல் மற்றும் உள்ளூர்மொழியாக்கச் சேவைகளை வழங்குவதன் மூலமாக, உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாகத் தனித்துவம் பெறுதல்.

எங்கள் இலட்சியம்

மிகவும் குறைவான முடித்துக்கொடுத்தல் நேரத்தில், மிகவும் சகாயமான கட்டணத்தில், வாடிக்கையாளரின் விருப்பத்துக்கேற்ற, உயர்வான, மொழிபெயர்ப்பு, மொழிபெயர்த்துப் பொருளுணர்த்தல் மற்றும் உள்ளூர்மொழியாக்கச் சேவைகளை வழங்குவதன் மூலமாக எங்களுடைய வாடிக்கையாளர்களின் வர்த்தக மதிப்பைக் கூட்டுவதற்கு நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம்.

மிக உயர்ந்த அளவிலான நம்பிக்கையையும், விசுவாசத்தையும் எங்களுடைய வாடிக்கையாளர்கள் இடையே தொடர்ந்து நிலைநாட்டி வருவதன் மூலமாக, அவர்களுடன் ஒரு நீண்டகால வணிகக் கூட்டணியை வளர்த்துக்கொள்வதே எங்களுடைய முக்கியமான குறிக்கோளாகும்.

அத்துடன் கூடுதலாக, மொழிபெயர்ப்புத் துறையில் ஓர் உயர்வான தரத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை உத்வேகத்துடன் மேற்கொள்ள நாங்கள் ஆயத்தமாக உள்ளோம்.

எங்களது செறிந்த விழுமங்கள்

ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷன் சர்வீசஸில் எமது ஒருபோதும் விட்டுக்கொடுக்கமுடியாத செறிந்த விழுமங்களின் துணையுடன் கூடிய “தொழில்முறைப்பண்புகளை” வலியுறுத்துவதன் மூலமாக, மொழிபெயர்ப்பில் உயர்தரத்தையும், நம்பகத்தன்மையையும் வழங்குவதற்கு நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம்.

எப்போதும் முழுமைக்கான முயற்சி

இந்த உலகத்தில் எதுவுமே முழுமையானதல்ல என்பதை நாங்கள் புரிந்துவைத்திருந்தாலும், நாங்கள் எதைச் செய்தாலும், அதில் சதாநேரமும் முழுமைக்கான முயற்சியுடன் செயல்படுவதற்கு இன்னும் கடப்பாடு கொண்டுள்ளோம். ஏனென்றால், “நம்பிக்கையை உருவாக்குவதற்குப் பல வருடங்கள் ஆகும் ஆனால் அதனை அழிப்பதற்கு சில நொடிகளே போதும்” என்பதை நாங்கள் புரிந்துவைத்திருக்கிறோம். ஒருமுறை கூட, பிழைகளும், தவறுகளும் நேரிடுவதற்கு நாங்கள் அனுமதிப்பதில்லை என்பது எங்களின் பணிக்கலாச்சாரம் விதித்திருக்கும் நடைமுறையாகும். எங்கள் வர்த்தகத்தின் உயிர்மூச்சான இதனையே நாங்கள் முழுமையான தரத்துக்கான உறுதியளித்தல் (TQA) என்றழைக்கிறோம். ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷனில், எங்களுடைய வாடிக்கையாளர்களின் எதிப்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யும்வகையிலும், அதற்கும் மேலான சேவையை வழங்கும்வகையிலும், பெரியதாக இருந்தாலும், சிறியதாக இருந்தாலும், ஒவ்வொரு திட்டப்பணிக்கும் ஒரு தரக் கட்டுப்பாட்டுச் செயல்முறையை கடுமையாக நடைமுறைப்படுத்தவதன் மூலமாக உயர்தர மொழிபெயர்ப்புச் சேவையை வழங்குவதற்கு நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம்.

பணியாளர்களை முதன்மைப்படுத்தும் குழுப்பணி

பணியாளர்களே எங்களது மிகவும் முக்கியமான பலமாக இருக்கிறார்கள். எங்களது சேவையின் முதுகெலும்பாக இருப்பதன் மூலமாக, எங்கள் வர்த்தகத்தின் தரத்துக்கும், வெற்றிக்கும் அவர்கள் உத்தரவாதம் அளிக்கிறார்கள். தங்ககளது துறையில் சிறந்து விளங்கும் தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களைப் பணியில் சேர்த்து, பயிற்சி அளித்து, அவர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கு நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம். மேலும், நாங்கள் குழுப்பணியின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். எங்களது அனைத்து ஊழியர்களையும் குழுவாகப் பணியாற்றும்படி ஊக்கப்படுத்துகிறோம்; குழுப்பணியால் மட்டுமே நீங்கள் எதிர்பார்க்கும் சிறப்பான விளைவுகளை உருவாக்கமுடியும் – பில் கேட்ஸ் சொன்னதைப்போல, “முழுமையான தனிநபர் என்று ஒருவர் இருக்கமுடியாது; ஒரு முழுமையான குழு மட்டுமே இருக்கமுடியும்”.

தனிக் கவனிப்பு

ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அவரவருக்கே உரிய குறிப்பிட்ட அவசியங்களும், தேவைகளும் கொண்டவர்கள் ஆகையால், எங்களுடைய வாடிக்கையாளர் அடித்தள அமைப்பு பல்வேறு பிரிவுகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, நல்ல பயனை அளிக்கின்ற தகவற்தொடர்புமுறையின் மூலமாக சாத்தியமாகக்கூடிய அதிகப்பட்சக் கவனத்தை ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் வழங்குவதை நாங்கள் எப்போதும் உறுதிப்படுத்துகிறோம். நாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் உயர்தரத்தைச் சாதிப்பதற்கான முயற்சியை எடுத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு, அவர்களுடைய குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக வாடிக்கையாளரின் விருப்பத்துக்கேற்றதாக உருவாக்கப்பட்ட, தொழில்முறையிலான கவனம் மிகுந்த சேவையை அளிப்பதற்கு நாங்கள் முன்னுரிமை வழங்குகிறோம். அதாவது, நாங்கள் எப்போதும், எங்களுடைய வாடிக்கையாளர்களின் விருப்பத்தை வேறு எதை விடவும் முக்கியமானதாகக் கருதுகிறோம். நாணயம், நேர்மை மற்றும் திறந்த-மனத்துடன் இருத்தல் ஆகியவற்றில் நாங்கள் உண்மையாகவே கவனம் செலுத்துகிறோம்.

சகாயமான கட்டணத்தையே விதிப்பது

கட்டணம், எப்போதுமே வாடிக்கையாளர்கள் மிகவும் அக்கறை காட்டும் அம்சமாக உள்ளது. சந்தையில் இருக்கும் மிகவும் சகாயமான கட்டணத்துக்கு அதிகமாகப் பணம்கொடுப்பதற்கு எவருமே விரும்புவதில்லை. ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷன் சர்வீசஸில், தரத்தையோ, திறமையையோ குறைத்துக் கொள்ளாமல், இருதரப்புக்கும் வெற்றியாக இருக்கும் வகையில், மிகவும் சகாயமானக் கட்டணத்தை மட்டுமே விதிப்பதற்கு நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம். விதிவிலக்கு எதுவும் இல்லாமல், உங்களது திட்டப்பணி எப்போதுமே சரியான முறையில், உரிய நேரத்தில், சிக்கனமாக முடித்துக்கொடுக்கப்படும்.

எங்களுடைய அனைத்துப் பணிகளையும் இரகசியமாக கையாளுதல்

இணையவசதி வேகமாக வளர்ச்சியடைந்து, பூகோள எல்லைகளை அர்த்தமற்றதாக்கி விட்டதால், மொழிபெயர்ப்பு வர்த்தகத்தில் மிக அதிகமாகப் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளபோதும், வாடிக்கையாளர்களைப் பொருத்தவரை, அவர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களின் இரகசியத்தன்மை குறித்து கவலையடையவும் வைத்துள்ளது. ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷனைப் பொருத்தவரை, இக்கவலையை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். வழங்கப்படும் அனைத்துத் தகவல்களையும் இரகசியமாகக் கையாளுவதற்குத் தேவைப்படும் முழுமையான தொழில்முறை நெறிமுறைகளைப் பராமரிப்பதற்கான உத்தரவாதத்தை நாங்கள் வழங்குகிறோம்.

சிங்கப்பூரின் கடுமையான சட்ட அமைப்பு உத்தரவாதம் அளிக்கும் வகையில் உங்கள் இரகசியத்தன்மையைப் பாதுகாக்கின்ற ஒரு நிறுவனம் என்ற முறையில், எங்கள் நிறுவனத்தின் மீது நீங்கள் முழுமையான பொறுப்பையும், நம்பிக்கையையும் கொள்வதற்கு ஏதுவாக, எங்களுடைய வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் மனநிம்மதியை அளிப்பதற்காக, “வெளிப்படுத்தாமல் இருத்தல் ஒப்பந்தம்” (NDA) ஒன்றில் கையெழுத்திட ஒப்புகிறோம்.

எங்களுடன் “வெளிப்படுத்தாமல் இருத்தல் ஒப்பந்தம்” (NDA) ஒன்றைச் செய்துகொள்ள, எங்களுடைய தரப்படுத்திய NDA ஆவணத்தை இங்குப் பதிவிறக்கம் செய்யுங்கள். அதன் உள்ளடக்கத்தைப் படித்து, உங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் தேதியைப் பூர்த்திசெய்து, ஆவணத்தின் அசல் மற்றும் நகலில் கையெழுத்திட்டுப் பின்னர் ஸ்கேன் செய்து எங்கள் கையெழுத்தைப் பெறுவதற்காக compliance@rafflestranslation.com.sg என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். அவற்றைப் பெற்றதும், உடனடியாக அவற்றில் கையெழுத்திட்டு, அதன் பிரதி ஒன்றை மின்னஞ்சல் மூலமாகவும், மூல ஆவணத்தை அஞ்சல் மூலமாகவும் நாங்கள் உங்களுக்கு அனுப்பிவைப்போம். அதற்குப் பிறகு, விலைப்புள்ளியைப் பெறுவதற்காக உங்கள் ஆவணங்களை எங்களுக்குப் பாதுகாப்பான உணர்வுடன் நீங்கள் அனுப்பலாம்.

எங்களுடைய இணையத்தளத்தை நீங்கள் பயன்படுத்தும்போது, எங்களுடைய அந்தரங்கக்காப்புக் கொள்கை யின்படி, உங்கள் அந்தரங்கம் மதிக்கப்படுவதற்கும், பாதுகாக்கப்படுவதற்குமான உறுதி உங்களுக்கு அளிக்கப்படுகிறது.