அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 • இது ஒரு நல்ல கேள்வி ஆகும். ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷன், சிங்கப்பூரில் இருக்கும் ஓர் உள்ளூர் நிறுவனம் என்பதை இதன் பெயரில் இருந்தே தெரிந்துகொள்ள முடியும். இந்த நிறுவனம் மலாய், தமிழ், சீனம் ஆகிய உள்ளூர் மொழிகளிலும், சிங்கப்பூரை உருவாக்கிய தாமஸ் ஸ்டாம்ஃபோர்டு ரேஃபிள்ஸ் அவர்களின் தாய்மொழியாகிய ஆங்கிலத்திலும், அத்துடன் மற்ற ஐரோப்பிய மொழிகளிலும், மொழிபெயர்ப்பு மற்றும் பொருளுணர்த்தும் சேவைகளை வழங்குவதில் கவனம்செலுத்திவருகிறது.
 • நீங்கள் ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷன்-ஐத் தேர்ந்தெடுத்திருப்பது சரிதானா என்பது குறித்து உங்களுக்குத் திருப்தியில்லாமல் இருக்கலாம். இருந்தாலும், கீழே கொடுக்கப்பட்டிருக்கும் எங்களது பலங்கள் குறித்துத் தெரிந்துகொண்டால், உங்கள் முடிவை நீங்கள் சந்தேகிக்கமாட்டீர்கள்:
 • ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு மூன்று விலைப்புள்ளிகளைப் பெறுவதற்கு முயற்சிசெய்துகொண்டிருக்கும்போது, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் எங்களது பலங்களை மதிப்பிட்டு உங்கள் முடிவினை நீங்கள் மேற்கொள்ள விரும்பலாம்:
 • நாங்கள் ஆண்டு முழுவதும் 24×7அடிப்படையில் சேவை வழங்க, விரைந்து 10~30 நிமிட நேரத்துக்குள் விசாரணக்குப் பதில் தருகிறோம்;
 • நாங்கள் வாடிக்கையாளர்களை ISO 9001 போன்ற தொழில்நுட்பத் தேவை அல்லது மலிவான வர்த்தக மாயைகளில் சிக்க வைப்பதில்லை, மாறாக எளிமையான வாடிக்கையாளர் அனுபவத்தை எங்களது மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகளால் திருப்தியாகத் தருவதற்கு உறுதி பூண்டுள்ளோம்;
 • நங்கள் மொழிபெயர்ப்பை மட்டும் வழங்குவதில்லை, மாறாக அதை புத்துருவாக்கதுடன் ட்ரான்ஸ்கிரியேஷனாக எங்களது சிறப்பான மொழிநடையோடு தருகிறோம்;
 • மொழிபெயர்க்கப்படும் மொழிகளில் நாங்கள் இருமொழி வல்லுனர்களாகவும், தொழில்துறைக்கு ஏற்ற தாய்மொழி வல்லுனர்களாகவும் இருப்பவர்களை மட்டுமே பணியமர்த்துகிறோம்;
 • எங்களால் பெரிய மொழிபெயர்ப்புப் பணிகளையும் மிகவும் குறைவான முடித்துக்கொடுத்தல் நேரத்தில் வழங்கமுடியும்;
 • சிங்கப்பூரிலேயே மிகவும் சகாயமான, கட்டுப்படியாகக்கூடிய கட்டணங்களை நாங்கள் வழங்குகிறோம், எ.கா. பெரிய மொழிபெயர்ப்பு திட்டங்களுக்கு $0.05/வார்த்தைக்கு அல்லது $25/பக்கத்துக்கு மட்டும் என்ற மலிவான கட்டணத்தைக் கோருகிறோம்;
 • சிங்கப்பூர் மொழிபெயர்ப்பு நிறுவனமாக இருக்கிறபடியால், சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் மொழி மற்றும் கலாச்சாரத்தை நன்கு அறிந்து வைத்திருக்கிறோம்.
 • இறுதியாக ஆனால் உறுதியாக ஒன்றைச் சொல்லிக்கொள்கிறோம், எங்கள் போட்டியாளர்களால் தரமுடியாத விலை, தரம் மற்றும் முடித்துக் கொடுக்கும் நேரம் ஆகியவற்றை சவால்விட்டுச் செய்துகொடுக்கிறோம்.
 • உண்மைதான், தரம் என்பது ஒவ்வொரு வணிக நிறுவனத்துக்கும் ஒரு நிலையான பிரச்சனையாகவே உள்ளது. எந்த வணிக நிறுவனமும் தரம் இல்லாமல் நிலைத்திருக்க முடியாது. இது மொழிபெயர்ப்புத் துறைக்கும் பொருந்தும். ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷன்-ஐப் பொருத்தவரை, ஒருபுறம் குறிப்பிட்ட துறை-தொடர்புடைய மொழிவல்லுனர்களை மட்டுமே பணிக்கு அமர்த்துவதன் மூலமாகவும், மற்றொருபுறம் ஒரு கடுமையான தரக் கட்டுப்பாட்டுச் செயல்முறையை நடைமுறைப்படுத்துவதன் மூலமாகவும், எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சிறப்பான தரத்தைக் கொண்ட சேவையை வழங்குவதற்கு நாங்கள் கடப்பாடு கொண்டிருக்கிறோம். மேலும், எங்களுடைய மொழிபெயர்ப்புச் சேவைகளின் தரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், இணையவசதி (கூகுளை பயன்படுத்துவது), வன்பொருள் வசதிகள், நிபுணத்துவம் மிக்க மொழிபெயர்ப்பு மென்பொருள், திட்டப்பணி மேலாண்மை மென்பொருள், சொல்வளம் மற்றும் பொருள்களுக்கான ஒரு மிகப்பெரிய தரவுத்தளம், மொழிபெயர்ப்பு நினைவக அமைப்பு மற்றும் எங்களுடைய வாடிக்கையாளர்களுடனான தொடர்புமுறை அமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ஒரு ஒருங்கிணைந்த மொழிபெயர்ப்புத் தகவல் அமைப்பை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்.
 • எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு முழுமையான திருப்தியை அளிக்கும் வகையில் “தொழில்முறைத்தன்மை, துல்லியம் மற்றும் முழுமையைச்” சாதித்துக்காட்டுவதே எங்களுடைய குறிக்கோளாகும்.
 • நாங்கள் சிங்கப்பூரிலேயே மிகவும் குறைவான கட்டணங்களை வழங்கித் தாக்குப்பிடிப்பது எவ்வாறென்றால், “சிறிய ஆதாயங்கள் மற்றும் நல்ல விற்பனை” என்று சொல்லப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதற்குதான் நாங்கள் அத்தனை பெரிய, நம்பிக்கைக்குரிய வாடிக்கையாளர் ஆதாரத்தைப் பெற்றிருக்கிறோம். எங்களுடைய தரம் நம்பத்தகுந்ததாக இல்லாமல் இருந்திருந்தால், இது சாத்தியமாகி இருந்திருக்காது!

ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷன்-ஐப் பொறுத்தவரை, இரகசியத்தைப் பேணுவதற்கு நாங்கள் எப்போதும் அதிகபட்ச முன்னுரிமையை அளிக்கிறோம். கடந்த பல வருடங்களாக, எங்களுடைய வாடிக்கையாளர்களின் அனைத்துத் தரவுகளையும் இரகசியமாக வைத்திருக்கும் எங்களுடைய கடப்பாட்டினால்தான், உலகம் முழுவதும் மிகவும் நன்கு அறியப்பட்ட சில நிறுவனங்களான, ஐபிஎம், ரோச் சிங்கப்பூர், சீமென்ஸ் சிங்கப்பூர், ஏஆன் கன்சல்டிங், எஸ்டி எலக்டிரானிக்ஸ், எம்பிஆர்ஐ, எலி-லில்லி, எஸ்ஐஏ, ஐஎன்சி ரிஸர்ச், நெட்டில்டன் குளோபல், வால்டன் இண்டர்நேஷனல் குரூப் முதலான நிறுவனங்களின் நம்பிக்கையை, இந்த நிறுவனங்களுடன் வெளிப்படுத்தாமல் இருத்தல் ஒப்பந்தம் (NDA) ஒன்றைச் செய்துகொள்ளாமலேயே, நாங்கள் பெற்றிருக்கிறோம். எங்களது வாடிக்கையாளரான சிங்கப்பூர் பிரதம மந்திரியின் அலுவலக ஆவணங்கள் நிச்சயமாக மிகவும் இரகசியமானவை, அவற்றைப் பற்றி வேறெதுவும் சொல்ல வேண்டியதேயில்லை.

வாடிக்கையாளரிமிருந்து பெறும் அனைத்துத் தகவலையும் இரகசியமாக வைத்திருப்பதை உறுதிப்படுத்துவதற்காக, நாங்கள் எங்களுடைய அனைத்து மொழிபெயர்ப்பாளர்கள், திருத்துனர்கள், பிழைதிருத்துனர்கள் மற்றும் எங்கள் தரவுகளை அணுகக்கூடிய தேவையைக் கொண்டிருக்கும் மற்ற நபர்கள் அனைவரையும், வெளிப்படுத்தாமல் இருத்தல் ஒப்பந்தம் (NDA) ஒன்றில் கையெழுத்திடச் செய்து வைத்திருக்கிறோம். மேலும், எங்களுடைய மொழிபெயர்ப்பாளர்களால் மொழிபெயர்க்கப்படுவதற்கு அல்லது செயல்முறைப்படுத்தப்படுவதற்கு முன்பாக, அனைத்து ஆவணங்களும் குறியீடாக்கப்பட்டு, கோப்புகளை அணுகுவதற்கான கடவுச்சொல் இந்த மொழிபெயர்ப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இப்படிச் செய்வதன் மூலமாக, பொருத்தமான தகவலைத் தொடர்புடைய நபர்களால் மட்டுமே அணுகமுடியும். மிகவும் இரகசியத்தன்மைகொண்ட ஆவணங்கள் அக-மொழிவல்லுனர்களாலும் ( நிறுவனத்துக்குள் பணிபுரிகின்ற), நிபுணர்களாலும் கையாளப்படுகின்றன. ஆகவே, தயவுசெய்து உங்களுடைய மதிப்புமிக்க தரவுகளை எங்களிடம் ஒப்படைப்பதைப் பாதுகாப்பானதாக உணருங்கள். சீனாவில் இருக்கும் எங்களுடைய ஊழியர்களிடம் ஒரு திட்டப்பணியை ஒப்படைக்கும் போதும், தொடர்புடைய கோப்புகள் அவர்களுடன் மட்டுமே இருக்கும் வகையில் நாங்கள் எங்களுடைய நியமமான வெளிப்படுத்தாமல் இருத்தல் ஒப்பந்தம் (NDA) ஒன்றில் அவர்களுடன் கையெழுத்திட்டு வைத்திருக்கும் ஒப்பந்தத்தின் பாதுகாப்பினால், தகவல்கள் சம்பந்தமில்லாதவர்களுக்கு வெளிப்படுத்தப்படுவதற்கான வழி எதுவும் இல்லை.

எங்கள் வாய்வார்த்தை மட்டுமே போதாது என்று நீங்கள் நினைத்தால், காகிதத்தில் எழுத்துபூர்வமாக உறுதிப்படுத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுடைய நியமமான ஆவணத்தை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யுங்கள். உங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் தேதியைப் பூர்த்திசெய்து, இரண்டு ஆவணங்களாகக் கையெழுத்திட்டு, ஸ்கேன் செய்து இரண்டு பிரதிகளையும் எங்களுக்கு அனுப்பிவையுங்கள். அவற்றைப் பெற்றதும், உடனடியாக அவற்றில் கையெழுத்திட்டு, அதன் பிரதி ஒன்றை மின்னஞ்சல் மூலமாகவும், மூல ஆவணத்தை அஞ்சல் மூலமாகவும் நாங்கள் உங்களுக்கு அனுப்பிவைப்போம்.

ஒரு நீண்டகாலக் கூட்டாண்மை இருதரப்புக்கும் வெற்றி தரும் சூழ்நிலையை உருவாக்குகிறது என்னும் விதத்தில், அது இருதரப்புக்கும் ஆதாயமளிக்கக்கூடியதாக இருக்கிறது. எங்களுடைய நீண்டகால வாடிக்கையாளர் திட்டத்தின்படி நாங்கள் பின்வரும் ஆதாயங்களை எங்களுடைய மதிப்புக்குரிய நீண்டகால வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம்: (1) கூடுதல் 5% தள்ளுபடி; (2) சொல்தொகுதி மற்றும் தகவலுக்கான தரவுத்தளம் ஒன்றை அமைத்து, அதன் மூலமாக வாடிக்கையாளரின் விருப்பத்துக்கேற்ற தீர்வு ஒன்றை உருவாக்குதல்; (3) மொழிபெயர்ப்பின் தரத்திற்கும், விரைவுத்தன்மைக்கும் எப்போதுமே உத்திரவாதம் அளிக்கும் வகையில், குறிப்பிட்ட பயன்பாட்டுக்கான மொழிவல்லுனர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களையே இந்த வாடிக்கையாளர்களுக்கு ஒதுக்குவதன் மூலமாக, இவர்களுக்கு முன்னுரிமை வழங்குதல்.

ஆம், நிச்சயமாக வழங்க முடியும். சிங்கப்பூரில், 20  வருடங்களுக்கும் மேலாக சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பைச் செய்துவருகிறோம். உயர் நீதிமன்ற மொழிபெயர்ப்புத் துறை தனது மொழிபெயர்ப்பு சேவையை ஜனவரி 2016 முதல் தினமும் ஏற்படும் இழப்பு காரணமாக நிறுத்திவிட்டு, தனியார் மற்றும் தூதரகங்கள் இச் சேவையை செய்துகொள்ள அனுமதித்தது. மொழிபெயர்ப்பின் சான்றளிக்கப்பட்ட பிரதி ஒன்றை உருவாக்குவதற்கு மூல மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பைச் சரிபார்த்து, எங்களுடைய அதிகாரபூர்வமான “சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்புக்கான சிறப்புப் பயன்பாட்டுக்குரிய முத்திரையை” நாங்கள் பதிக்கவேண்டும். அத்தகைய மொழிபெயர்ப்புகள் அதன் பிறகு உள்ளூர் அரசாங்க அமைப்புகள் மற்றும் நீதிமன்றங்களால் ஏற்றுக்கொள்ளப்படும்.

இங்கு குறிப்பிடப்படவேண்டியதாவது, ஜனவரி 2016 முதல், PR அல்லது குடியுரிமை வேண்டி ICA-வுக்குச் சமர்ப்பிக்கப்படும் அனைத்துச் சான்றிதழ்களும் அயல்நாட்டு மொழிகளிலிருந்தால் அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மற்றும் சான்றளிக்கப்பட்டு, சான்றுறுதிமொழியப்பட்ட (நோட்டரைஸ்டு) ஆவணங்களாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இல்லை. ஆனால் எங்கள் வழக்குரைஞர் மூலம் நீங்கள் அதை சான்றுறுதிபெற்ற ஆவணமாகப் பெற நாங்கள் உதவ முடியும். ஏனென்றால், சான்றுறுதி வழங்கும்  வழக்குரைஞரால் மட்டுமே சான்றுறுதிகளை வழங்கமுடியும். பொதுவாக அவர் குறைந்தபட்சம் பன்னிரண்டு (12) வருடங்கள் வழக்குரைஞராகப் பணியாற்றிய வழக்குரைஞர் ஆக இருப்பார். மொழிபெயர்ப்பாளர் எவரும் சான்றுறுதிபெற்ற மொழிபெயர்ப்பை வழங்க முடியாது, அவரே சான்றுறுதி வழங்கும் வழக்குரைஞராகத் தகுதி பெற்றிருந்தால் தவிர.

சில நேரங்களில், நீதிமன்றம் மொழிபெயர்ப்பாளரை ஒரு பிரமாண ஆவணத்தில் பிரமாணங்களை ஏற்கும் ஆணையர் முன் கையொப்பமிட ஆணையிடும். இம்மாதிரியான கேஸில், நாம் எமது மொழிபெயர்ப்பாளர்/படிதிருத்துனரை அவது அறிவிற்கெட்டிய துல்லியமான மொழிபெயர்ப்பை வழங்கியுள்ளதாக ஆணையர் முன்பு பிரமாணம் செய்ய ஏற்பாடு செய்வோம். இதை ஏற்று ஆணையர் மொழிபெயர்ப்பின் மூலப்படிமீது அவரது அலுவலக முத்திரையிட்டுக் கையொப்பமிடுவார்.

ஒரு மொழிபெயர்ப்புப் பணியை செய்து வழங்குவதற்கான எங்களுடைய வழக்கமான முடித்துக்கொடுத்தல் நேரம், 10 பக்கங்கள் (சுமார் 5000 வார்த்தைகள்) வரையிலான ஆவணம் ஒன்றுக்கு 3 வேலை நாட்களும், 30 பக்கங்கள் (சுமார் 15,000 வார்த்தைகள்) வரையிலான ஆவணம் ஒன்றுக்கு 5 வேலை நாட்களும் ஆகும். வழக்கமான கட்டணத்துக்கு 30-50% மேலதிகக் கட்டணத்துடன், நாங்கள் 24 மணிநேரச் சேவையையும் வழங்குகிறோம். பெரிய, கடினமான, அவசரமான மொழிபெயர்ப்புப் பணியை எடுத்துக்கொண்டு, சாத்தியமான மிகக் குறைவான முடித்துக்கொடுத்தல் நேரத்துக்குள் அதனை முடிப்பது மிகவும் சவாலானதாகவே இருக்கும். ஆனால் எங்களிடமுள்ள உரிய நேரத்துக்குள் திறமையாக மொழிபெயர்த்து வழங்குகின்ற, அனுபவம் வாய்ந்த தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களின் துணையோடு எங்களால் அதனைச் செய்துகொடுக்க முடியும்.

மொழிபெயர்க்கவேண்டியிருக்கும் உரைப்பகுதி மிகவும் சிறியதாக இருந்தாலொழிய, நாங்கள் வழக்கமாக ஒரு வார்த்தைக்கு இவ்வளவு என்ற அடிப்படையில் கட்டணம் விதிக்கிறோம். மைக்ரோசாஃப்ட் வோர்டு மெனுவின் (“டூல்ஸ்”-ஐ கிளிக் செய்து, பிறகு “வோர்டு கவுண்ட்”-ஐ கிளிக் செய்யவும்) அடிப்படையில் வார்த்தைகளின் எண்ணிக்கையை நாங்கள் கணக்கிடுகிறோம். மொழிபெயர்க்கவேண்டியிருக்கும் ஆவணத்தின் மென் பிரதி ஒன்று உங்களிடம் இருந்தால், நீங்களாகவே நேரடியாக வார்த்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடலாம்; மென் பிரதி ஒன்று உங்களிடம் இல்லாவிட்டால், மொழிபெயர்க்க வேண்டியிருக்கும் வார்த்தைகளின் எண்ணிக்கையைக் கைமுறையாக மட்டுமே மதிப்பிடவோ, எண்ணவோ முடியும். அதற்கான மிகவும் எளிய வழிமுறை இதுவாகும்: வரிகளின் எண்ணிக்கை x ஒவ்வொரு வரியிலும் இருக்கும் வார்த்தைகளின் எண்ணிக்கை x பக்கங்களின் எண்ணிக்கை = மொழிபெயர்க்கவேண்டியிருக்கும் வார்த்தைகளின் எண்ணிக்கை. வார்த்தைகளின் எண்ணிக்கையை இலவசமாக மதிப்பீடு செய்வதற்கு, மின்னஞ்சல் மூலமாக உங்கள் ஆவணத்தை நீங்கள் எங்களுக்கு அனுப்பவும் செய்யலாம்.

எங்களுடைய வாடிக்கையாளர்கள் விரும்பினால், பக்கங்களின் அடிப்படையிலும் எங்களால் கட்டணத்தைக் குறிப்பிடமுடியும்.

ஆம். பல மொழிகளில் தகுதிமிக்க சிங்கப்பூரில் வசிக்கும் மொழிபெயர்ப்பாளர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். அவர்களுடைய மொழிப் புலமையும், தொழில்துறை அறிவும், பொதுவாக எங்களுடைய வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்குப் போதுமானதாக உள்ளது. ஆகவே, எங்களுடைய பெரும்பாலான போட்டியாளர்கள் செய்வதைப்போல, வெளிநாடுகளிலுள்ள சுதந்திரமாகத் தொழில் செய்பவர்களுக்கோ அல்லது வெளிநாட்டு வணிகர்களுக்கோ எங்களுடைய திட்டப்பணிகளை உபஒப்பந்தம் செய்யும் அவசியம் எங்களுக்கு இல்லை. வாடிக்கையாளரின் விருப்பத்துக்கேற்றதாக உருவாக்கப்பட்ட சேவையை எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கவேண்டியத் தேவை ஏற்படும்போது மட்டும், அதனை உள்ளூரில் செய்துகொடுக்கமுடியாத நிலையில், எங்கள் தரவுத்தளத்தில் உள்ள வெளிப்புற மொழிபெயர்ப்பாளர்களின் உதவியை நாங்கள் நாடுகிறோம். இருந்தாலும், மற்ற நாடுகளில் உள்ள மொழிபெயர்ப்பாளர்களை எங்களுடைய திட்டப்பணிகளுக்குப் பயன்படுத்தும்போதுகூட, அதன் மீதான எங்களுடைய கட்டுப்பாட்டை நாங்கள் இழப்பதில்லை அல்லது தரத்திலும் சமரசம் செய்துகொள்வதில்லை. எங்களுடைய வாடிக்கையாளர்களிடம் ஒரு வேலையை முடித்து வழங்குவதற்கு முன்பு செய்யப்படும் இறுதியான தரக் கட்டுப்பாட்டுச் செயல்முறைக்கான பொறுப்பு எப்போதுமே எங்களுடைய சிங்கப்பூர் அலுவலகத்தைச் சார்ந்ததாகும். ஆகவே, ஒரு வேலை வெளிநாட்டில் செயல்முறைப்படுத்தப்பட்டிருந்தாலும்கூட அதனுடைய தரம் நிறைவாகவே இருக்கும் என்னும் உறுதி உங்களுக்கு அளிக்கப்படுகிறது.

இல்லை. மொழிபெயர்ப்பை உங்களுக்கு முழுமையான திருப்தியை அளிக்கும் அளவுக்குச் சரியானதாகவும், துல்லியமானதாகவும் ஆக்குவதற்கான ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் எடுத்துக் கொள்ளும் அதே சமயம், இறுதிப்-படி மொழிபெயர்ப்பு வழங்கப்பட்ட பிறகும் நீங்கள் விரும்பும் திருத்தங்களை இலவசமாகச் செய்து கொள்ளலாம். இது நாங்கள் வழங்குவதில் எங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை மட்டுமல்ல, மிகச் சிறந்ததையே நாங்கள் உங்களுக்கு வழங்குவோம் என்னும் எங்களுடைய கடப்பாட்டையும் இது காட்டுகிறது. இப்படி நாங்கள் சொன்ன பிறகும், திருத்தங்களைச் செய்வதற்கான வேண்டுகோள் எதுவும் அரிதாகவே எங்களுடைய வாடிக்கையாளர்களிடம் இருந்து விடுக்கப்படுகிறது. இதற்கு, எங்களுடைய கடுமையான தரக் கட்டுப்பாட்டுச் செயல்முறையே காரணமாகும். அப்படி வேண்டுகோள் எதுவும் இருந்தால் கூட, அது வழக்கமாக சிறிய திருத்தங்களுக்காகவே இருக்கும். இரண்டு தடவைகளுக்கு மேல் ஒரு வேலை எங்களுடைய வாடிக்கையாளரால் திருத்தப்படும் நிலையை நாங்கள் அரிதாகவே எதிர்கொள்கிறோம்.

இருப்பினும், இது இலக்கு மொழிக்கு மட்டுமே பொருந்தும். நாம் மொழிபெயர்ப்பை முடித்த பிறகு, எங்களிடம் நீங்கள் மீண்டும் மேம்படுத்தல்களுடன் கூடிய மூலமொழிப் பதிப்பைக் கொணர்ந்து இலக்கு மொழியில் மொழிபெயர்க்கக் கோரினால், குறைந்தபட்சம் $30 விதித்து உரையில் சேர்க்கப்பட்ட கூடுதல் வார்த்தைகளுக்கு கட்டணம் வசூலிப்போம்.

இல்லை, ஒருபோதும் பயன்படுத்துவதில்லை. இயந்திர மொழிபெயர்ப்புகள் தவறானவை ஆகும். சாதாரணமான வாசிப்புக்குத் தேவையான மட்டத்தை எட்டவே முடியாத அளவுக்கு அவை உள்ளன. எங்களுடைய தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களுக்குச் சொந்தமான, இயங்காற்றல் வீச்சைக் கொண்ட அறிவு மற்றும் அனுபவத்தை எவ்வளவு முன்னேற்றமான மென்பொருளாலும் வெற்றி கொள்ளவே முடியாது. அத்துடன், ஒரு கணிசமான அளவு திருத்துதல் மற்றும் பிழைதிருத்துதல் பணி இயந்திர மொழிபெயர்ப்புக்குத் தேவையாக இருப்பதால், உள்ளடக்கத்தின் தரநிர்ணயம் மற்றும் நிலைப்புத் தன்மையைக் மதிப்பிடும்போது வழக்கமாக, மனிதரால் செய்யப்படும் மொழிபெயர்ப்புக்கு ஆவதை விட அதிகமான நேரத்தையே எடுத்துக்கொள்கிறது. ஆகவே, சொல்வளத்தின் நிலைப்புத் தன்மையை உறுதிசெய்வதற்காக, டிரேடோஸ், வோர்ட்ஃபாஸ்ட் போன்ற நினைவகக் கருவிகளை சில நேரங்களில் எங்கள் பணிக்குத் துணையாக வைத்துக்கொண்டாலும், AI- செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் மொழிபெயர்ப்புத் துறையில் புகுந்துவிட்ட நிலையில் எதிர்காலத்திலும் நாங்கள் மனிதர்களை மட்டுமே மொழிபெயர்ப்பைச் செய்வதற்குப் பயன்படுத்துவோம்.