வர்த்தக மொழிபெயர்ப்பு

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் பிரிவுகளின் கீழ் அடங்காத அனைத்துக் களங்களையும் அதாவது, நிதியியல் மொழிபெயர்ப்பு
சட்ட மொழிபெயர்ப்பு, உயிர் அறிவியல்/மருத்துவ மொழிபெயர்ப்பு மற்றும் தொழில்துறை மொழிபெயர்ப்பு இவைகளுள் –
மேலும் பல களங்களையும் எங்களுடைய வர்த்தக மொழிபெயர்ப்பு உள்ளடக்கியுள்ளது:

 • விளம்பரம்
 • சுற்றுச்சூழல் பாதுகாப்பு
 • உணவகம் & விருந்தோம்பல்
 • மனித வளம்
 • காப்பீடு
 • சர்வதேச வர்த்தகம்
 • முதலீடுகள்
 • மேலாண்மை
 • சந்தைப்படுத்துதல்
 • தொலைக்காட்சி ஊடகங்கள்
 • மக்கள் தொடர்புகள்
 • வீடு நில உடைமைகள்
 • சுற்றுலா

இங்கு, கையாளுவதற்கு மிகவும் சவாலான துறை விளம்பரம் செய்தல் ஆகும். நுகர்வோரின் கண்களைக் கவர்வதற்கு, சொல்லுக்குச் சொல் என்ற அடிப்படையிலான மொழிபெயர்ப்பைக் காட்டிலும், புத்துருவாக்க மொழிபெயர்ப்பே வழக்கமாகத் தேவைப்படுகிறது. ஏனென்றால், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு விளம்பரத்தை சீன மொழிக்கோ அல்லது வேறொரு மொழிக்கோ மொழிபெயர்க்கும்போது, எவ்வளவுதான் சரளமாக எழுதப்பட்டிருந்தாலும் கூட, சொற்கள் மற்றும் வெளிப்பாடுகளின் இயற்கையான ஓட்டம் தடைபடுவதால், உரை மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்னும் மிச்சமீதம் உணரப்படும் நிலை ஏற்பட்டு விடுகிறது. ஆகவே, அது இலக்குச் சந்தையின் பார்வையாளர்களின் தாய்மொழியில் உருவாக்கப்பட்ட விளம்பரத்தைப் போல, பார்வையாளர்களைக் கவர்வதாகவும் மனதைத் தொடுவதாகவும் இருப்பது அரிதாகும்.

சட்டம் தொடர்பான மொழிபெயர்ப்புக்கும், எங்களுடைய பணியாளர்களாலும், அமைப்பாலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள சவாலை எதிர்கொண்டு, ஊடகங்களில் வெளியிடத்தகும் தரத்துடன் செவ்வனே முடித்து வழங்கும் ஆற்றல் எங்களுக்கு உள்ளது என்னும் கூடுதல் நம்பிக்கையை வழங்க முடியும்!

நாங்கள் முக்கியமாகக் கையாளுகின்ற வர்த்தகம் தொடர்பான ஆவணங்களில் பின்வருவன அடங்கும்:

 • விளம்பரங்கள்
 • ஏல ஆவணங்கள்
 • வர்த்தகத் திட்டங்கள்
 • நிறுவனச் சிற்றேடுகள்
 • கருத்தரங்கு நிரல்கள்
 • கண்காட்சிச் சிற்றேடுகள்
 • சுற்றுச்சூழல் இடர்/தாக்கம் குறித்த அறிக்கைகள்
 • சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கைகள்
 • விடுதிகள் மற்றும் ஓய்வு விடுதிகள்
 • பற்று ஓலைகள்
 • பொறுப்புறுதிக் கடிதங்கள்
 • சந்தைப்படுத்துதல் ஆவணங்கள்
 • செய்தித்தாள் நறுக்குகள்
 • அறிவிப்புகள் மற்றும் சுற்றறிக்கைகள்
 • திட்டப்பணி முன்மொழிவுகள்
 • கருத்துக் கணிப்புப் படிவங்கள் & கேள்விப்பட்டியல்கள்
 • ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள்
 • பயிற்சி ஆவணங்கள்

எங்களுடைய சிறப்புத்தன்மை மிக்க, நிதியியல் மொழிபெயர்ப்பு குறித்த இலவச விலைப்புள்ளி ஒன்றைப் பெற இங்கே கிளிக்செய்யவும் அல்லது 65 6570 6028 எண்ணில் எங்களை அழைக்கவும்.