நற்சான்றிதழ்கள்

நிலையாக உயர்ந்த அளவில் இருக்கும் எங்களுடைய சேவை, சிங்கப்பூரின் முக்கியமான மொழிபெயர்ப்பு நிறுவனங்களில் ஒன்றாக வளருவதற்கு எங்களுக்கு ஆற்றலைக் கொடுத்திருப்பது மட்டுமன்றி, அந்த வளர்ச்சிப் பாதையில் மேற்கொண்ட பயணத்தின்போது நல்ல பாராட்டுகளையும் பெற்றுத்தந்துள்ளது. தற்போது எங்களுக்கு வாடிக்கையாளராக இருப்பவர்களில் சிலர் எங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைப் பின்வரும் பத்திகளில் படித்துப் பாருங்கள்:

ஹோ பெய் லின்

சிங்கப்பூர் டெலிகம்யூனிகேஷன்ஸ் லிமிட்டட்

செக்மெண்ட் மார்கெட்டிங் & கம்யூனிகேஷன்ஸ் எக்சிகியூட்டிவ்

“நான் இதற்கு முன் பல மொழிபெயர்ப்பு நிறுவனங்களுடன் பணிபுரிந்திருக்கிறேன். பல்வேறு வெளிநாட்டு மொழிகளில், ஒரே நாளில், மிகவும் விரைவான முடித்துக்கொடுத்தல் நேரத்துக்குள், நல்ல தரம் வாய்ந்த மொழிபெயர்ப்புச் சேவைகளை நியாயமான கட்டணத்தில் வழங்குவதில் ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷன் தான் இது வரை மிகவும் சிறந்த நிறுவனமாக உள்ளது. மிகக் குறைவான ஒரு கால வரையறைக்குள் சந்தைப்படுத்துதல் கூடுதல்ஈட்டு ஆவணங்களை விரைவாகச் செய்துமுடிக்கவும், ஊக்குவிப்பு வழங்குதல்களை விரைவாகத் தொடங்கவும் முடிவதால், பணி உற்பத்திப் பெருகுவதில் எனக்கு உதவியாக உள்ளது. உரையின் மொழிபெயர்ப்பை வழங்குவதற்கு முன்பாகக் குறைந்தபட்சம் 3 சுற்றுகள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுவதால், பணியின் தரத்துக்கான உறுதியை எனக்களிப்பதில் ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷன் ஒருபோதும் தவறியதில்லை. கணக்குச் சேவையளிக்கும் திரு. மைக்கேல் வாங், வாடிக்கையாளரின் வேண்டுகோளை மிகவும் பொறுப்பாகவும், பொறுமையுடனும் கவனிப்பவராக இருந்து வருகிறார். அவர் குறித்த நேரத்தில் வேலையை முடித்து வழங்க வேண்டும் என்பதற்காக அலுவலக வேலை நேரம் முடிந்த பிறகும் கூட தன்னால் இயன்ற அளவு சிறப்பாக முயற்சிசெய்து வந்திருக்கிறார். ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷனுடன் பணிபுரிந்தது எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. எதிர்காலத்தில் அவர்களுடன் பணிபுரிவதற்கான வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.”

ஜென்னிஃபர் சிஹ்

டெகன்ஸ்

சீனியர் அசோசியேட்

“ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷனின் சேவைகளில் தரம், உடனடியாகச் செயலாற்றும் திறம், பதில் அளிப்பதில் விரைவு, குறைவான கட்டணம் ஆகியவை எங்களின் எதிர்பார்ப்புகளுக்கும் மேலானவையாக தொடர்ந்து இருந்து வருகிறது. அவர்களுடைய சேவை நட்பார்ந்ததாகவும், அனுகூலமானதாகவும் உள்ளது. மிகவும் குறைந்த கால வரையறைக்கு முன்னதாகவே ஒவ்வொருமுறையும் மொழிபெயர்ப்பை வழங்குவதன் மூலமாக, நாங்கள் சிறப்பாக விளங்குவதற்கு அவர்கள் தொடர்ந்து துணைபுரிகிறார்கள். சீன மொழி மொழிபெயர்ப்புகள் தேவைப்படுகிற பல வேலைகளில் அவர்களுடன் பணிபுரிவதற்கான வாய்ப்புகளை நாங்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறோம். தகுதிவாய்ந்த, நம்பகமான, சகாயமான கட்டணத்துடன் கூடிய மொழிபெயர்ப்புச் சேவை தேவைப்படுகிற எவருக்கும் அவர்களுடைய சேவைகளைப் பரிந்துரை செய்வதற்கு நாங்கள் தயங்கமாட்டோம்.”

போ ஷுஸ் சோவ்

கிரி8 சிங்கப்பூர்

மேலாளர்

“எங்களுடைய நிதியியல் வெளியீட்டு வர்த்தகத்துக்கு மிகவும் முக்கியமானவைகளாகிய உயர் மட்டத் தொழில்முறைத்தன்மை, தரமான சேவை, நேர்த்தியான நேர மேலாண்மையுடன் கூடிய முடித்து வழங்குதல் ஆகியவற்றை உங்களுடைய குழு மீண்டும் மீண்டும் செயலில் காட்டியுள்ளது. உங்களுடைய தொழில்முறைச் சேவையின் துணையில்லாமல் எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை நாங்கள் எங்கனம் வழங்கமுடியும் என்பதை எங்களால் கற்பனை கூடச் செய்யமுடியாது.”

காஸண்ட்ரா டீ

பையலோமாடிக் ஃபார் ஈஸ்ட் பிரைவேட் லிமிட்டட்

செயலாளர்

“கடினமான காலக்கெடு கொடுக்கப்படும்போதும், ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷன் மூலமாக உயர்தர மொழிபெயர்ப்புப் பணி செய்து தரப்படுவது எங்களை மிகவும் கவர்ந்துள்ளது. அதன் தரமான சேவை மற்றும் உயர் மட்டத் தொழில்முறைத்தன்மை காரணமாக, உடன் பணிபுரிவதற்குப் பரிந்துரை செய்ய ஏற்ற நிறுவனமாக உள்ளது.”

ஜூலியட்டா லீ

ஹேவிட் அசோசியேட்ஸ்

சீனியர் அசோசியேட்

“சிறப்பான உதவி மற்றும் உரிய நேரத்தில், தரத்துடன் கூடிய வழங்குதலுக்காக நிறைவான நன்றி, எரிக் 🙂 தயவுசெய்து உங்களுடைய குழுவுக்கும் எங்களது நன்றியைத் தெரிவியுங்கள்! எதிர்காலத்தில் மேலும் பல வேலைகளுக்காக உங்களிடம் நிச்சயமாக நாங்கள் மீண்டும் வருவோம்!”

ஹான் ஈ பிங்

கிரௌன் ஆசியா பசிஃபிக் ஹோல்டிங்ஸ் லிமிட்டட்

சட்ட மேலாளர்

“பல வருடங்களாகச் சீன மொழியில் சட்ட மொழிபெயர்ப்புகளைச் செய்வதற்கு திரு. வாங் ஜியான் எனக்கு உதவி செய்து வந்திருக்கிறார். சிக்கலான ஆவணங்களுக்குக் கூட நல்ல, துல்லியமான மொழிபெயர்ப்பு வழங்கும் ஆற்றல் அவருக்கு உள்ளது. அவசரமான சூழ்நிலைகளில், அவர் விரைவாகப் பதிலளிக்கிறார். சட்டம் தொடர்பான சொல்வளத்தை அவர் புரிந்துகொண்டு, வாடிக்கையாளருக்கு சீன மொழியில் சரியாகப் பொருளுணர்த்தி ஆலோசனை வழங்குகிறார். நான் அவரிடம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். இந்தச் செயல்முறையின் மூலமாக என்னுடைய சீன மொழியறிவையும் மேம்படுத்திக்கொண்டிருக்கிறேன். அவருடைய கட்டணங்களும் நியாயமானவையே ஆகும். மற்றவர்களுக்கும் அவரது சேவைகளை நான் பெரிதும் பரிந்துரை செய்கிறேன்.”

யூங் யான் லீ

எலி லில்லி (சிங்கப்பூர்) பிரைவேட் லிமிட்டட்

சீனியர் கிளினிகல் ரிசர்ச்அசோசியேட்

“ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷன் பல வருடங்களாக எங்களுக்கு மொழிபெயர்ப்புச் சேவைகளை வழங்கி வருகிறது. அவர்கள் மிகவும் தொழில்முறைத்தன்மையுடன் இருப்பதாலும், எப்போதும் சிறந்த தரத்தில் வேலைகளை முடித்து வழங்குவதாலும், எங்களுடைய நம்பகமான சேவை வழங்குனர்களில் ஒருவராக விளங்குகிறார்கள். தொடக்கத்தில் அவர்கள் சீன மொழி மொழிபெயர்ப்பை மட்டுமே வழங்கினார்கள். பின்னர் மலாய் மொழி மொழிபெயர்ப்பையும் சேர்த்து வழங்கினார்கள். ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷனை அணுகியதால் மட்டுமே எங்களுக்குப் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்திருக்கிறது. அதனாலேயே எங்களுக்கு இது சிறப்பான ஒரு சேவையாக இருந்தது. அவர்கள் மிகவும் நம்பகமானவர்களாக இருப்பதாலும், மொழிபெயர்ப்பின் வேகம் மிகவும் விரைவானதாகவும், துல்லியமானதாகவும் இருப்பதாலும், நாங்கள் ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷனை நிச்சயமாக மற்றவர்களுக்குப் பரிந்துரை செய்வோம். அவர்கள் எங்களுக்கு வழங்கிவரும் உயர்ந்த தரத்தைக் கருதும்போது, அவர்களுடைய கட்டணமும், நாங்கள் அவர்களுடைய சேவைகளைப் பயன்படுத்திவரும் பல வருடங்களாகவே சகாயமானதாக இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக நாங்கள் ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷனை உடன்பணிவோருக்கும், நிறுவனத்துக்கு வெளியே உள்ள மற்றவர்களுக்கும் பரிந்துரைக்கவும் செய்திருக்கிறோம்.”

ஷரோன் சியா

கிலென்கோர் சிங்கப்பூர் பிரைவேட் லிமிட்டட்

செயலாளர்

“எங்களுக்கு எவ்வளவு விரைவாக மொழிபெயர்ப்பு தேவைப்பட்டாலும் ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷன் எப்போதுமே உரிய நேரத்துக்குள், மிகச்சிறந்த தரத்தில் மொழிபெயர்ப்பை வழங்கி வருகிறது. அவர்களுடைய சேவை பெரிதும் பரிந்துரை செய்யப்படுகிறது. நான் இறுதியில் நம்பிக்கைக்குரிய ஒரு மொழிபெயர்ப்பாளரைக் கண்டுபிடித்திருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி மைக்கேல்.”

ஜோயன்னா அங்

ரேஃபிள்ஸ் ஹோட்டல்ஸ் & ரிசார்ட்ஸ்

சீனியர் மேனேஜர், பிராண்ட் ஸ்ட்ரேட்டஜி & ஆர்கனைசேஷனல் டெவலப்மெண்ட்

“ஆம், துல்லியம் மற்றும் தரம், விரைவான முடித்துக்கொடுத்தல் நேரம், சகாயமான கட்டணம் மற்றும் உயர்வான நம்பகத்தன்மை ஆகியவற்றால் உங்களுடைய சேவையைக் குறித்து நான் மிகவும் திருப்தி அடைந்திருக்கிறேன். நான் திரு.மைக்கேல் அவர்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டிருக்கும்போது, மிகவும் நம்பிக்கையாக உணர்கிறேன். செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கும் பணி ஒப்புக்கொள்ளப்பட்ட நேரத்துக்குள் வழங்கப்பட்டுவிடும் என்பதையும், அது உறுதியான தரத்தைக் கொண்டிருக்கும் என்பதையும் நான் அறிவேன். எனது நிறுவனத்துக்குத் தேவைப்படும்போது, உங்களுடைய சேவைகளை நான் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்வேன். ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷனை நிச்சயமாக மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்வேன்.” நன்றி.

க்ளார்க் சான்

லில்லி- கிளினிகல் ஃபார்மகாலஜி பிரைவேட் லிமிட்டட் -க்கான என்யுஎஸ் மையம்

கிளினிகல் ரிசர்ச் அசோசியேட்

“நெடிய ஆவணங்களைப் போலவே, ஒரு-பக்க அளவிலான சிறிய ஆவணங்களையும் மொழிபெயர்த்து, ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷன் எங்களுடைய நிறுவனத்துக்கு உயர்ந்த அளவிலான சேவையை வழங்கியுள்ளது. இவற்றில் ஒவ்வொரு சூழ்நிலையிலும், சைனா-லிங்க், விரைவான முடித்துக்கொடுத்தல் நேரம், தெளிவான, உடனடித் தகவல்தொடர்பு, எங்களுடைய குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வகற்கான நெகிழ்வு ஆகியவற்றுடன் சேவைகளை எங்களுக்கு வழங்கியுள்ளது. நாங்கள் சேர்ந்து வர்த்தகம் செய்யும் கடந்த பல வருடங்களாக அவர்கள் மிகவும் நம்பகமானவர்கள் என்பதை நிரூபணம் செய்துள்ளார்கள்.”

லிலியன் லோஹ்

ஐஎன்சி ரிசர்ச்

பிராஜக்ட் லீடர்

“ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷன் நல்ல தரம் வாய்ந்த மொழிபெயர்ப்புச் சேவையை வழங்கி வருகிறது. நாங்கள் மொழிபெயர்ப்பு செய்வதற்காக அனுப்பிய ஆவணங்களின் மொழிபெயர்ப்புகள் எங்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளன. மொழிபெயர்ப்பு வேலையைச் செய்து முடிப்பதில் அவர்கள் மிகவும் வேகமானவர்களாக உள்ளனர்; மிகவும் முக்கியமாக, அவர்களுடைய கட்டணம் மிகவும் சகாயமானதாக உள்ளது. நல்ல தரம் வாய்ந்த மொழிபெயர்ப்புச் சேவையை வழங்குவதிலும் அவர்கள் நெகிழ்வுத்தன்மையுடனும், உதவியாகவும் உள்ளனர். அவர்களுடைய சேவைகளை நாங்கள் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்வோம். அத்துடன், ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷனை மற்ற நிறுவனங்களுக்கும் நாங்கள் பரிந்துரை செய்து வருகிறோம்.”

பிரையன் யூ

எம்பிஆர்ஐ, இன்க்.

சிஸ்டம் இஞ்சினீயர்

”விரைவான, கவர்சிகரமான மொழிபெயர்ப்புச் சேவையை எங்களுக்கு வழங்கியதற்காக, நாங்கள் உங்களுக்கும், ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷனின் அர்ப்பணிப்பு உணர்வுக் கொண்ட அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறோம். சிறப்பான உங்களுடைய சேவைத்திறன் மூலமாக நாங்கள் ஒப்பந்தப் புள்ளியை எளிதாக வென்றிருக்கிறோம். உங்களுடைய சேவையைப் பயன்படுத்துவது மிகவும் மகிழ்ச்சியை அளிப்பதாகும். எங்களுடைய கூட்டாளிகள் அனைவருக்கும் உங்களுடைய சேவைகளை நாங்கள் நிச்சயமாகப் பரிந்துரை செய்வோம்.”

பெய் இன் ஜியி

ஜோசப் டான் ஜுட் பென்னி

வழக்கறிஞர்

“திருப்திகரம். பணியின் தன்மை மற்றும் தரம் நன்றாக உள்ளது. மிகவும் திறமையான, நம்பகமான சேவை. குறிப்பாக, நான் உங்களுடைய நிறுவனத்தை எளிதாக அடைய முடிந்தது. உங்களுடைய பிரதிநிதி எப்போதும் உரிய பதில்களைத் தருகிறார். உங்களுடைய சேவையைத் தொடர்ந்து பயன்படுத்துவேன், மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்வேன்.”

சியூ மே மே

ஏபிஐ ரிசர்ச் சிங்கப்பூர்

அலுவலக நிர்வாகி

ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷன் மிகவும் திறமையானதாகவும், உதவிகரமானதாகவும் உள்ளது. வாடிக்கையாளரின் தேவைகளை உரிய நேரத்தில் பூர்த்தி செய்யும் ஆற்றல் அவர்களிடம் உள்ளது.

செலீனா அங்

வோர்ல்ட்ஹோட்டல்ஸ் – பிராந்திய அலுவலகம்

துணை மேலாளர், பிசினஸ் டெவலப்மெண்ட்

“கிட்டத்தட்ட சிங்கப்பூரில் உள்ள அனைத்து மொழிபெயர்ப்பு நிறுவனங்களையும் நாங்கள் அணுகியிருக்கிறோம், எங்களுடைய சட்ட ஆவணங்களையும், நிறுவனச் சிற்றேட்டையும் உன்னதத் தரத்துடன் சகாயமான கட்டணத்தில் திறம்படவும், துல்லியமாகவும் மொழிபெயர்ப்பு செய்வதில், ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷன் சர்வீசஸ் குழுவைப் போல எவரும் எப்போதும் இருந்ததில்லை. கட்டணம் மற்றும் சிக்கல்தன்மையைப் பொருத்தவரை, மற்றவர்கள் சாத்தியமே இல்லை என்று கருதுவதை ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷனால் செய்து காட்ட முடியும். அது உண்மையிலேயே வேலையைச் செம்மையாகச் செய்யும் நிறுவனம் ஆகும். ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷனை எங்களுடைய கூட்டாளிகளுக்கு நாங்கள் உறுதியாகப் பரிந்துரை செய்கிறோம்.”