மொழிபெயர்த்துப் பொருளுணர்த்தும் சேவை

ஆசியாவின் அச்சாணியான சிங்கப்பூர், சர்வதேசக் கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்கங்களை நடத்துவதற்குப் பொருத்தமான சிறந்த இடமாக விளங்குவதால், ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷன் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு தொழில்முறை மொழிபெயர்த்துப் பொருளுணர்த்தும் சேவைகளை வழங்குவதில் மிகச்சிறந்த இடத்தை வகிக்கிறது.

தொடர்ச்சியாகப் பொருளுணர்த்தல் (CP) , உடன்நிகழ் பொருளுணர்த்தல் (SI) , தாழ்ந்தகுரல் பொருளுணர்த்தல் (WI), தொலைநிலைக் கருத்தரங்கப் பொருளுணர்த்தல், வழித்துணைப் பொருளுணர்த்தல் முதலியவை உள்ளிட்ட மேலும் பல பொருளுணர்த்தல் சேவைகளைப் பொருளுணர்த்தல் சேவைகள் தேவைப்படும் அனைத்துச் சூழ்நிலைகளிலும், முக்கியமான ஆசிய மொழிகளில் வழங்கக்கூடிய உயர்தர அனுபவத்தைக் கொண்ட பொருளுணர்த்துனர்கள் மூலம் ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷன் வழங்குகிறது.

தொடர்ச்சியாகப் பொருளுணர்த்தல்

தொடர்ச்சியாகப் பொருளுணர்த்தல் என்பது, மிகவும் பொதுவான பொருளுணர்த்தல் வகையைச் சார்ந்தது ஆகும். இதன்படி, உங்களுடைய பேச்சாளர் சில வாக்கியங்களைப் பேசிவிட்டுப் பிறகு நிறுத்திக் கொள்வார். எங்களது தொடர்ச்சியாகப் பொருளுணர்த்துனர் அவர் பேசியவற்றை வேறொரு மொழியில் மொழிபெயர்ப்பார்.

தலத்திலேயே நடைபெறும் தொடர்ச்சியாகப் பொருளுணர்த்தல் பெரும்பாலும் சிறிய குழுவினருக்காக அல்லது ஒருவர்- ஒருவர் சந்திப்புகள் நிகழும் ஆய்வரங்கங்கள், நேர்காணல்கள், பயிற்சி அமர்வுகள், வர்த்தகக் கூட்டங்கள், மருத்துவக் ஆலோசனை, திருமணப் பதிவு, செய்தி வெளியீடுகள், நீதிமன்ற விசாரணைகள் போன்றவை அல்லது ஒரு கருத்தரங்கத்தில் பங்கேற்றிருக்கும் தனிநபருக்குத் தாழ்ந்த குரலில் விளக்கம்தரவும் பயன்படுத்தப்படுகிறது.

இயல்பாக, பொருளுணர்த்தல் பேச்சு நிகழும் அதே நேரத்தில் மேற்கொள்ளப்படுவதில்லை. இதற்கென்று சிறப்புக் கருவி எதுவும் தேவையில்லை. உடன்நிகழ்கின்ற பொருளுணர்த்தலுக்கு ஆகும் கட்டணத்தோடு ஒப்பிடுகையில் இதற்கு ஆகும் கட்டணமும் கணிசமான அளவுக்கு மலிவானதே ஆகும்.

உடன்நிகழ் பொருளுணர்த்தல்

உடன்நிகழ் பொருளுணர்த்தல் என்பது, அதன் பெயரிலேயே விளக்கம் அடங்கியுள்ளதைப் போல, உங்களுடைய பேச்சாளர் என்ன சொன்னார் என்பதைக் கிட்டத்தட்ட அதே நேரத்தில் பொருளுணர்த்துனர் மொழிபெயர்த்து வழங்குவதாகும். உடன்நிகழ் பொருளுணர்த்தல், பொதுவாக சர்வதேசக் கருத்தரங்கங்க நிகழ்வின்போது அல்லது குவியக் குழு விவாதங்களின்போது பயன்படுத்தப்படுகிறது.

உடன்நிகழ் பொருளுணர்த்தல் சேவையை வழங்கும்போது, எங்களுடைய பொருளுணர்த்துனர்கள் (பொதுவாக ஓரிணை மொழிகளுக்கு இரண்டு பேர்) ஒலிபுகா அறைக்குள் அமர்ந்து, ஒருவர் மாற்றி ஒருவர் பணிபுரிந்து, பேராளர்கள் அனைவரும் புரிந்துகொள்ள வசதியாக ஆடியோ கருவியின் மூலமாகப் பார்வையாளர்களுக்கு தமது மொழிபெயர்ப்பை ஒலிபரப்புவார்கள்

உடன்நிகழ்கின்ற பொருள்விளக்கச் சேவை பேச்சு நிகழும் அதே நேரத்தில் மேற்கொள்ளப்படுவதாலும், திருத்தம செய்ய இரண்டாவது வாய்ப்பு ஏதுமில்லைஎன்பதாலும், முதல்முறையாகக் கேட்கும்போதே பொருளுணர்த்துனர்கள் சரியாகப் புரிந்துகொண்டாகவேண்டும். உள்ளபடியே, இதற்கு மிகச்சிறந்த பொருளுணர்த்தல் திறனும், மிக விரைவான எதிர்வினை வேகமும் தேவை. உங்களுக்கு உறுதியளிக்கும் வகையில், எங்களுடைய அனைத்து உடன்நிகழ் பொருளுணர்த்துனர்களும் குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் தொழில்முறை அனுபவம் உடையவர்களாக உள்ளனர். அத்துடன், இவர்களில் பலரும் சட்டம், மருத்துவம், உயிர் அறிவியல், தகவல் தொழில்நுட்பம், வங்கியியல் அல்லது நிதியியல் போன்ற அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் களங்களில் ஆழமான அறிவைக் கொண்டுள்ளனர்.

தாழ்குரல் பொருளுணர்த்தல்

பொருளுணர்த்தல் சேவை ஒருவர் அல்லது இருவருக்கு மட்டும் தேவைப்படும்போது, நீங்கள் ஒரேயொரு SI பொருளுணர்த்துனரை அமர்த்தி அவர்கள் ஒரேநேரத்தில் பொருளுணர்த்தலைப் புரிந்துகொள்ள ஏற்பாடு செய்ய எண்ணலாம். இது மெய்யாகவே, மொத்த உபகரண வாடகைச் செலவைச் சேமிக்க உதவும்.

தாழ்குரல் பொருளுணர்த்தலில் பொருளுணர்த்துனர் இலக்குமொழியைப் புரிந்துகொள்ளவேண்டுபவரின் அருகே அமர்ந்து அவரது செவிக்கருகே தாழ்குரலில் பொருளுணர்த்துவாதாகும். மேலும் இது மெய்-நேரத்தில் செய்யப்படுவதாகும்.

தொலைநிலைக் கருத்தரங்கப் பொருளுணர்த்தல்

தொலைநிலைக் கருத்தரங்கப் பொருளுணர்த்தல் என்பது ஒரு சிறிய கூட்டத்தை நடத்துவதற்கு மிகவும் திறமையான, கட்டணம் குறைவான வழியாகும். எங்களது பின்தொடர் பொருளுணர்த்துனர், எங்களது வளாகத்தில் இருந்து உங்களது நோக்கத்தைப் பூர்த்திசெய்யும் வகையில் கூட்டத்துக்கான பொருளுணர்த்தல் சேவையை அளிப்பார். நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் கூட்டத்துக்கான தலத்துக்கு பொருளுணர்த்துனர் பயணம் செய்யத்தேவையில்லை என்பதால், இதற்கான கட்டணமும் தொடர்ச்சியாகப் பொருளுணர்த்தலுக்கு ஆகும் கட்டணத்தை விட மிகவும் குறைவானதே ஆகும்.

வழித்துணைப் பொருளுணர்த்தல்

வழித்துணைப் பொருளுணர்த்தல் என்பது நாங்கள் உங்களுக்கு அல்லது ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் இருந்து – சிங்கப்பூருக்கு அல்லது வேறு ஏதாவது ஆசிய நாட்டுக்கு, வர்த்தகப் பயணம் அல்லது இடங்களைக் காணச் சுற்றுலா மேற்கொள்ளும்விருந்தினருக்கு, நாங்கள் வழங்கும் பொருளுணர்த்தற் சேவை ஆகும்.

வழித்துணைப் பொருளுணர்த்தலில், ஒரு பொருளுணர்த்துனர் பயணம்மேற்கொள்ளும் நபர் அல்லது குழுவுடன் இணைந்து, தலத்துக்கு அல்லது கூட்டத்துக்கு அல்லது நேர்காணல் நடக்குமிடத்துக்குப் பயணம் மேற்கொள்வார், இவ்விதப் பங்களிப்பைச் செய்யும் பொருளுணர்த்துனர் வழித்துணைப் பொருளுணர்த்துனர் என்றழைக்கப்படுகிறார்.

பொருளுணர்த்தற் கருவி

உடன்நிகழ் பொருளுணர்த்துனர்களை வழங்குவதோடு, எந்தப் பிரச்சனைகள் எழுந்தாலும் அதனைச் சமாளிப்பதற்காக, நிகழ்ச்சி முழுவதும் தலத்திலேயே இருக்கும் அனுபவம் வாய்ந்த தொழிலாளர் ஒருவரைப் பணியமர்த்திக் கருத்தரங்கப் பொருளுணர்த்தற் கருவியையும் நாங்கள் வாடகைக்கு வழங்குகிறோம்

1. முழுமையான கருவி

2 நபர்கள் பொருளுணர்த்து னர் அறை – விளக்குகள் மற்றும் காற்றாடிகளுடன்

விளக்கம்

ஒவ்வொரு மொழி இணைக்கும் ஒரு ஒலிபுகா அறை தேவைப்படும். இது மேடையையும் சொற்பொழிவு மேசையையும் காணத்தகுந்த இடத்தில் அமைக்கப்படும், இந்த அறையில் தேவைப்படும் மின்னியல் சாதனங்கள் மற்றும் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும்.

எண்ணிக்கை

அறைகளின் எண்ணிக்கை மொழி இணைகளின் எண்ணிக்கையைச் சார்ந்தது; எடுத்துக்காட்டாக, ஜப்பான், கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து பேராளர்களைப் பெற்றிருந்தால், ஆங்கிலத்திலிருந்து இம்மூன்று மொழிகளுக்கும் மொழிபெயர்க்க நீங்கள் மூன்று அறைகளைப் பதிவுசெய்ய வேண்டும், மேலும் 2 மொழிகளுக்கு மேல் இருந்தால் ரிலே செய்யப்படும்.

இரட்டைப் பொருளுணர்த்துனர் கட்டுப்பாட்டுக்கருவி – ஹெட்செட் மற்றும் மைக்களுடன்

விளக்கம்

அறைக்குள் ஒவ்வொரு பொருளுணர்த்துனருக்கும் ஒரு பொருளுணர்த்துனர் கட்டுப்பாட்டுக்கருவி வழங்கப்படும்.
அவுட்புட் சேனல்கள் முன்னமே அமைக்கப்பட்டு, பொருளுணர்த்துனர்களின் அவுட்புட் தனித்தனி சேனல்களில் வழங்கப்படும். எடுத்துக்காட்டாக,

சேனல்0 – கூடம்
சேனல்1– ஆங்கிலம்
சேனல்2- சீனா
சேனல்3- கொரியா
சேனல்4- ஜப்பான்
சேனல்5-வியட்நாம்

எண்ணிக்கை

உடன்நிகழ் பொருளுணர்த்தலில் ஒரு மொழி இணைக்கு இரண்டு பொருளுணர்த்துனர்கள் இணைந்து பணியாற்றத் தேவைப்படுகிறது, மேலும் அவர்கள் முறையே 30 நிமிட நேரம் கவனமுடன் பணியாற்றுவர். எனவே 2 பொருளுணர்த்துனர் கட்டுப்பாட்டுக்கருவிகள் ஒவ்வொரு அறையிலும் வழங்கப்படும்.

சேனல் ட்ரான்ஸ்மிட்டர்/ மையக் கட்டுப்பாட்டுத் தொகுதி

விளக்கம்

பொருளுணர்த்துனரின் மொழிபெயர்ப்பு ஐடெஸ்க்கிலிருந்து ஓர் இன்டக்ரஸ் டிஜிட்டல் ட்ரான்ஸ்மிட்டர் மூலம் பேராளர்களின் அகச்சிவப்பு ஒலிவாங்கிகளுக்கு வழங்கப்படும். இது ஒளிஇழைக் கம்பி வடங்கள் மூலம் DCN மையக் கட்டுப்பாட்டுத் தொகுதியுடன் இணைக்கப்படும்.
அகச்சிவப்பு ஒலிபரப்புக்காக ட்ரான்ஸ்மிட்டருடன் கதிர்வீச்சுக்கருவிகள் இணைக்கப்பாடும்

எண்ணிக்கை

ஒரு தொகுதி மட்டும் போதுமானது.

போச் ரேடியேட்டர்கள் – நிகழ்ச்சியை ஒலிபரப்ப

விளக்கம்

நிகழ்ச்சிக் கூடமெங்கிலும், பேராளர்கள் உடன்நிகழ் பொருளுணர்த்தலை போதுமான வலுவுடன் அகச்சிவப்பு சமிக்கை மூலம் பெறுவதை உறுதிப்படுத்தப் பல இடங்களில் ரேடியேட்டர்கள் தாங்கிகளில் நிறுவப்படும்.

எண்ணிக்கை

கூட்ட அரங்கின் பரப்பளவைச் சார்ந்தது, வழக்கமாக 4~5 ரேடியேட்டர்கள் வழங்கப்படும்.

இன்ஃப்ராகாம் ரெசீவர்கள் – மின்னேற்றித் தட்டு மற்றும் தளவாடங்களுடன்

விளக்கம்

32 சேனல்கள் கொண்ட, பேராளரின் டிஜிட்டல் இன்ஃப்ராரெட் ரெசீவர்கள் ஹெட்செட்டுடன் வழங்கப்படும். அவற்றில் முன்னதாகவே கருத்தரங்கத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எந்த மொழியையும் இசைவு செய்து கொள்ளலாம்.

எண்ணிக்கை

பொருளுணர்த்தல் சேவைத் தேவைப்படும் பேராளர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஹெட்செட்டுகள் வழங்கப்படும்.
எனவே, கருவிகளின் தேவைக்கு விலைப்புள்ளியைக் கோரும்போது ஹெட்செட்டுகளின் மொத்த எண்ணிக்கையை எமக்கு அறியத் தர வேண்டும்.

DCN-NG பேராளர் தொகுதி

விளக்கம்

கேள்வி & பதில் அமர்வில் கேள்விகள் எழுப்பத் தோதுவாக, வாடிக்கையாளரின் கோரிக்கைக்கேற்ப பேராளர்கள் தொகுதி வழங்கப்படும்.

எண்ணிக்கை

வாடிக்கையாளரின் கோரிக்கைக்கேற்ப பேராளர் தொகுதி வழங்கப்படும். சில வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படலாம், சிலருக்குத் தேவைப்படாது.

கருத்தரங்கு முழுதும் தயார்நிலை தொழிலாளர்கள்

விளக்கம்

கருத்தரங்கு நடக்கும்போது எழும் தொழில்நுட்பப் பிரச்சினைகளை தீர்க்க தொழிலாளர் ஒருவர் நிகழ்ச்சி முழுதும் அரங்கில் தயார் நிலையிலிருக்கப் பணிக்கப்படுவார்.

எண்ணிக்கை

பொதுவாக 1 தொழிலாளர் மட்டுமே அரங்கில் இருப்பார்.

2. சுற்றுலா வழிகாட்டி ஏற்பாடு

ஒரு தலத்தில் விருந்தினர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்கு செல்ல வேண்டியபோது எழும் உடன்நிகழ் பொருளுணர்த்தல் சேவைத் தேவை அல்லது தலத்திலேயே ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களுக்கு முழுமையாகக் கருவிகளை சிறிய எண்ணிக்கையிலுள்ள பங்கேற்பாளர்களுக்காக வாடகைக்கு ஏற்பாடு செய்வதில் பெரும் செலவு ஏற்படும்போது தாங்கள் எங்களது கம்பியில்லா சுற்றுலா வழிகாட்டி அமைப்பைத் தெரிவு செய்துகொள்ளலாம்.

ஒரு கம்பியில்லா சுற்றுலா வழிகாட்டி அமைப்பில் 50 மீட்டர் வரம்புக்குள் நன்றாகச் செயற்படும் 1 ட்ரான்ஸ்மிட்டர் + 1 ரெசீவர் வழங்கப்படும். ஒரு ட்ரான்ஸ்மிட்டரை பல ரெசீவர்களுடன் செயல்படும் வரம்புக்குள் இயக்கலாம்.

நாங்கள் வழங்கிய பொருளுணர்த்தல் சேவை நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்டப் படங்கள்

எங்களுடைய சிறப்புத்தன்மை மிக்க, நிதியியல் மொழிபெயர்ப்பு குறித்த இலவச விலைப்புள்ளி ஒன்றைப் பெற இங்கே கிளிக்செய்யவும் அல்லது 65 6570 6028 எண்ணில் எங்களை அழைக்கவும்.