சட்ட மொழிபெயர்ப்பு

மொழிபெயர்ப்புத் தொழில்துறையின் அனைத்துப் பிரிவுகளிலும், சட்டப் பிரிவு கையாளுவதற்குக் கடினமான பிரிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இருமொழிகளில் புலமை பெற்ற ஒவ்வொரு  மொழிபெயர்ப்பாளருக்கும் சட்டம் தொடர்பான மொழிபெயர்ப்பைச் செய்யக்கூடிய ஆற்றல் இருந்துவிட முடியாது என்பதே உண்மை; சட்டம் தொடர்பான பின்புலத்தைக் கொண்ட தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களால் மட்டுமே தரமான மொழிபெயர்ப்பை உருவாக்க முடியும்.

சட்டம் தொடர்பான ஒரு மொழிபெயர்ப்பு முற்றிலும் சரியானதாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை  ஒருபோதும்  வலியுறுத்தாமல் விடமுடியாது. உங்களுடைய சட்டம் தொடர்பான ஆவணம் தவறாக மொழிபெயர்க்கப்படுவதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏதேனும் துல்லியமற்றதன்மை அல்லது தெளிவின்மை குழப்பம், விரக்தி, தேவையற்ற தாமதம் ஆகியவற்றை ஏற்படுத்தும், அல்லது நிறுவனத்துக்குப் பெரிய இழப்புகளையும் கூட ஏற்படுத்திவிட முடியும்.

ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷனில், பலமொழிகளில் சட்ட ஆவணங்களுக்கும், பத்திரங்களுக்கும் சான்றிதழ்பெற்ற உண்மையான மொழிபெயர்ப்பை நாங்கள் வழங்குகிறோம். சட்ட மொழிபெயர்ப்புகளின் தரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், எல்எல்.பி., எல்எல்.எம்., மற்றும் எல்எல்.டி. (ஜே.டி.) பட்டங்களைப் பெற்ற மொழிபெயர்ப்பாளர்களை மட்டுமே நாங்கள் பணிக்கமர்த்துகிறோம். அதேநேரத்தில், 5 வருடங்களுக்கும் அதிகமான நேரடியான மொழிபெயர்ப்பு அனுபவத்தைக் கொண்ட எங்களுடைய முழு-நேர அகமொழிபெயர்ப்பாளர்களுக்கு (எங்களுடைய நிறுவனத்துக்குள்ளேயே பணிபுரிகின்றவர்கள்), சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், ஒப்பந்தச் சட்டம், நிறுவனச் சட்டம், டார்ட்ஸ் முதலிய சட்டப்படிப்புகளை வழங்குவதன் மூலமாக, அவர்கள் தொழில்முறைச் சட்ட மொழிபெயர்ப்பாளர்கள் ஆகுவதற்கான பயிற்சியை நாங்கள் அளிக்கிறோம்.

எங்களது நிறுவனத்தின் அனைத்துச் சட்டம் தொடர்பான மொழிபெயர்ப்பாளர்களும், சட்டக் கலைக்களஞ்சியச் சொற்கள், சட்டக் கோட்பாடுகள், சட்டக் கொள்கைகள், சட்ட விதிமுறைகள் ஆகியவற்றை நன்கறிந்தவர்களாவார்கள். மேலும் சட்ட வலைப் பின்னலின் சூசகங்களைப் புரிந்து கொண்டவர்கள் ஆவர்கள்.

எமது முன்னுரிமை

பிற மொழிபெயர்ப்புகளைப் போலன்றி, சட்ட ஆவணங்களை மொழிபெயர்க்கும்போது துல்லியம் மற்றும் சரளம் ஆகிய இரண்டுக்கும் மேலான முன்னுரிமை தரப்பட்டு மொழிபெயர்ப்பும் திருத்தமும் செய்யப் படுவதால் பங்கேற்றுள்ள கட்சிகளின் உட்கிடக்கை மற்றும் உறுதிமொழிகள் மட்டுமன்றி நிபந்தனைகள் மற்றும் நிலைகள் ஆகியவையும் உண்மையாகச் சொற்களில் பிரதிபலிப்பதாக வெளியிடப்பட்டு, இலக்கு மொழியின் எளிமை மற்றும் நளினத்துடன் மொழிபெயர்த்து எழுதப்பட்டு உங்களுக்கு முழுமையான மனஅமைதியைத் தரும்படி மொழிபெயர்க்கப்படுகிறது.

தொழில்முறை மொழிபெயர்ப்பென்பது வாக்கியங்களின் குவிப்பல்ல

இங்கே குறிப்பிடத்தகுந்தது யாதெனில், ஆங்கிலத்திலிருந்து சீன மொழிக்கும், சீன மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கும் சட்ட மொழிபெயர்ப்பு செய்துதரும் எங்களது வல்லமையாகும். நாங்கள் ஆழ்ந்த பொதுச் சட்டம் மற்றும் சிவில் சட்ட அறிவுடன் திகழ்வதால், குறிப்பாக சீனச் சட்ட அமைப்பில் அறிவு பெற்றுள்ளதால், 1999-ஆம் ஆண்டில் எங்களது நிறுவத்தின் துவக்கம் முதலாக இலட்சோப இலட்சம் சட்ட வார்த்தைகளை ஆங்கிலத்திலிருந்து சீனமொழிக்கு அல்லது சீனமொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்துள்ளோம். ஆங்கிலத்திலிருந்து சீனமொழிக்கு மொழிபெயர்க்கும்போது எழும் சவால்களில் ஒன்றாகத் திகழ்வது, 20 வரிகள் கொண்ட ஆங்கில நெடும்பத்தியை, சீனமொழியின் நுட்பங்களைப் புரிந்து சரியான சட்டச் சொற்களைக் கொண்டு, சொற்றொடர்களை சீர்திருத்திக் கட்டமைத்து ஒரே வாக்கியமாக ஆக்குவதாகும்.

தைவான் சீன மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பதிலுள்ள சிரமம்

தைவான் சீனமொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும்போது, அதைச் சரியான மொழிபெயர்ப்பாக்க ஏற்படும் சிரமம் என்னவென்றால், தைவான் சீனமொழி தொன்மைச் சீனமொழியைப் போல எழுதப்படுவதாகும், அதாவது தொன்மைச் சீனமொழி இலக்கணத்தையும், தைவான் வட்டார மொழிவழக்கையும் கலந்து பயன்படுத்தி எழுதப்படுவதாகும். இதன் காரணமாவது தாயகச் சீனாவிலிருந்து 60 ஆண்டுகளுக்கு முன்பே தைவான் பிரிந்துவிட்டதாகும். இது வாக்கியங்களைப் புரிந்துகொள்வதைச் சிக்கலாக்கி விடுகிறது. சிலவேளைகளில், தைவான் சீன மொழியின் நீண்ட வாக்கியத்தை படித்தப் பின்பு, அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது என அறியமுடியாது, அதில் எது எழுவாய், பயனிலை அல்லது செயப்படுபொருள் என்று கூடக் கூற முடியாது. இருப்பினும், எங்கள் பணியாளர்கள் மற்றும் அமைப்பு, மேற்கூறப்பட்ட சிக்கல்களையும் தெளிவுபடுத்தி அச்சேற்றும் தரத்தில், எளிதாகவும் திறமையாகவும் மொழிபெயர்ப்பு செய்துதர வல்லவர்கள் என்ற நம்பிக்கையைத் தருகிறோம். எங்களை நீங்கள் நம்பலாம்!

கூடுதலான சேவை

கூடுதல் கட்டணங்களின்றி சான்றிதழ்பெற்ற சட்ட மொழிபெயர்ப்பை நாங்கள் வழங்குகிறோம். அதாவது, உங்கள் சட்ட ஆவண மொழிபெயர்ப்பை நீங்கள் படித்துச் சரிபார்த்து உறுதிப்படுத்தியபின் நாங்கள் எங்கள் முத்திரையை பதிக்கிறோம். கூடுதலாக, உங்களது சார்பாக, சட்ட மொழிபெயர்ப்புகளை, சில ஆணையங்கள் மற்றும் அரசாங்க முகமைகளில் தேவைப்படும் விதத்தில் நோட்டரி பப்ளிக் வழக்குரைஞர் அல்லது உறுதிமொழியேற்பு ஆணையர் ஒருவரால் வழங்கப்படும் உறுதிமொழிந்த – நோட்டரைஸ்டு ஆவணமாகப் பெற்றுத்தர முடியும். இருப்பினும், சட்டமொழிபெயர்ப்புக்கு உறுதிமொழிந்து தரும் சேவைக்கு தாங்கள் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும்.

நாங்கள் முக்கியமாகக் கையாளுகின்ற சட்ட ஆவணங்களில் பின்வருவன அடங்கும்:

 • உறுதிமொழிப் பத்திரங்கள்
 • நடுவர் தீர்ப்புகள்
 • சங்கத்தின் நடைமுறை விதிகள்
 • துணைவிதிகள்
 • பதிப்புரிமை உறுதிமொழிதல்கள்
 • நீதிமன்றத் தீர்ப்புகள்
 • கூட்டுஸ்தாபன உடன்பாடுகள் & ஒப்பந்தங்கள்
 • சட்டங்கள், ஒழுங்குமுறைகள், சட்டவரைவு, மற்றும் விதிகள்
 • இணக்கக் கடிதம்
 • கடன் ஒப்பந்தங்கள்
 • அடமான ஒப்பந்தங்கள்
 • கூட்டுச்செயல்பாடு ஒப்பந்தங்கள்
 • புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
 • காப்புரிமைகள்
 • பவர் ஆப் அட்டர்னி – செயலுரிமை அதிகாரப் பத்திரம்
 • வாங்குதல் மற்றும் விற்றல் ஒப்பந்தங்கள்
 • வாடகைக்குடியிருப்பு ஒப்பந்தங்கள்
 • நற்சான்றிதழ் சான்று மற்றும் பிற வழக்கு ஆவணங்கள்
 • வணிகச்சின்ன விண்ணப்பங்கள்
 • அறக்கட்டளைப் பத்திரங்கள்

எங்களுடைய சிறப்புத்தன்மை மிக்க, சட்ட மொழிபெயர்ப்புக் குறித்த இலவச விலைப்புள்ளி ஒன்றைப் பெற இங்கே கிளிக்செய்யவும் அல்லது 65 6570 6028 எண்ணில் எங்களை அழைக்கவும்.