இணையத்தள உள்ளூர்மொழியாக்கம்

இன்றைய காலக்கட்டத்தில்,  புதிய சர்வதேசச் சந்தையையும், எதிர்பார்க்கக்கூடிய வாடிக்கையாளர்களையும் உங்களுடைய இணையத்தளத்தின் மூலமாகச் சென்றடைவது  எளிதாக  இருக்கமுடியாது! உங்களுடைய இணையத்தளம், உங்களைப் பற்றிய பிம்பமாகவும், உங்களது ஆத்மாவாகவும், உங்களது பலமாகவும் உள்ளது! அதனை உள்ளூர் மொழியாக்கம் செய்து, அது உங்களுக்குக் கணிசமான ஆதாயங்களையும், விளைவுகளையும் வழங்கும் வகையில் மாற்றியமைப்பதற்கு நாங்கள் உங்களுக்குதவ  ஏன் எங்களை அனுமதிக்கக் கூடாது?

இணையத்தளத்தை உள்ளூர்மொழியாக்கம் செய்வது என்பது ஓர் இணையத்தளத்தைக் குறிப்பிட்ட உள்ளூர்ச் சந்தையின் பயனர்களுக்கு, மொழிரீதியாகவும், கலாச்சாரரீதியாகவும் தொடர்புடையதாகவும், பொருத்தமானதாகவும் ஆக்குவதற்காக, ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்த்து, மாற்றியமைக்கும் செயல்முறை ஆகும். கலாச்சாரரீதியாக மாற்றியமைத்தல் மற்றும் சீன மொழி, ஜப்பான் மற்றும் கொரிய மொழிகளுக்கு ஏற்றவாறு இரட்டை பைட்டுகளை சாத்தியமாக்குவது போன்ற காரணிகளின் விளைவாக, முன்னதாகக் குறிப்பிட்டிருப்பதைப்போல, சொற்களை எளிதாக மொழிபெயர்ப்பதற்கும் மேலாக அதிகமான செயல்பாடுகள் தேவைப்படுவதாக அது அமைந்துள்ளது.

ஓர் இணையதளம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதைப் பற்றியும், அதன் (ஆன்லைன் உதவி போன்ற) பாகங்கள் ஒவ்வொன்றையும் எவ்வாறு மாற்றியமைப்பது என்பதைப் பற்றியும் ஆழமான அறிவைக் கொண்டிருப்பதால், எங்களுடைய அக-நாட்டுக் குழுவுக்கு, மூலத்தைப் போலவே அதே அளவு குறையில்லாத மொழித்தரத்துடன், முழுமையாகச் செயல்படக்கூடிய, உள்ளூருக்கேற்றதாக்கப்பட்ட பதிப்புகளை உருவாக்குவதற்கான ஆற்றல் மட்டுமன்றி, உங்களுடைய உள்ளூருக்கேற்றதாக்குதல் திட்டப்பணிகளைத் திறமையாக மேம்படுத்தி, நிர்வகிப்பதற்கான ஆற்றலும் உள்ளது.

வேலைச் செயல்முறை

உங்களுடைய இணையத்தளத்தை உள்ளூர்மொழியாக்கம் செய்ய நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் மூலக் கோப்புகளை எங்களுக்கு அனுப்புவது மட்டுமே ஆகும். அல்லது உங்களுடைய இணையத்தளத்துக்கான அணுகல் உரிமையை எங்களுக்கு நீங்கள் வழங்கலாம். இதன் மூலமாக நாங்கள் உங்களுடைய இணையத்தளத்தைப் பதிவிறக்கம் செய்து, வார்த்தைகளின் எண்ணிக்கையை கணக்கிட்டு, விவரங்களை உங்களுக்கு அனுப்பிவைப்போம். எவற்றை மொழிபெயர்ப்பது என்று ஒப்புக்கொண்டு, தேவையற்ற கோப்புகளை நீங்கள் அழிப்பதற்கு  இது உதவியாக  இருக்கும்.

நாங்கள் கையாளக்கூடிய மூலக் கோப்பு வகைகளில் பின்வருவன அடங்கும்:

  • எச்டிஎம்எல்
  • எக்ஸ்எச்டிஎம்எல்
  • எக்ஸ்எம்எல்
  • ஜாவா மற்றும் ஜாவாஸ்கிரிப்ட்
  • ஃப்ளாஷ்
  • கோல்டுஃபியூஷன்
  • சிஎஸ்எஸ்
  • ஏஎஸ்பி
  • பிஎச்பி

எங்களுடைய உள்ளூர்மொழியாக்கக் குழு அதன் பிறகு இந்தக் கோப்புகளில் நேரடியாகப் பணியாற்றி, உங்களுடைய மொழிபெயர்க்கப்பட்ட  இணையத்தளம் உங்களுடைய இலக்கு நாட்டு மொழியில் உண்மையாகவே உரையாடும் வகையில் இருப்பதை உறுதிசெய்யும். எங்களுடைய பணி முடிந்தவுடன், உண்மையாகவே உள்ளூர்மொழியாக்கப்பட்ட  இணையத்தளமாக நீங்கள் பதிவேற்றம் செய்வதற்குத் தயாராக, பணி முடிக்கப்பட்ட  இணையத்தளத்தை உங்களிடம் வழங்குவோம். மொத்தத்தில், ஒரு பன்மொழி இணையத்தளம், உங்களுடைய நிறுவனத்துக்குப் அதிகப் போக்குவரத்தையும், வருவாயையும் கொண்டுவந்து, நீங்கள் கவனம் செலுத்தும் சந்தையின் புதிய வாடிக்கையாளர்களைக் கவர்வது மட்டுமன்றி, ஓர் உலகளாவிய ஆட்டக்காரராக உங்களுடைய நிலைமையை உலகளாவிய அரங்கில் நிலைநாட்டவும் முடியும்..

2000-2017ஆண்டுகளுக்கிடையில் நாங்கள் ஏறக்குறைய ஐநூறு இணையத்தளங்களை மொழிபெயர்த்து உள்ளூர்மொழியாக்கம் செய்திருக்கிறோம், அவற்றுள் சமீபத்தில் உள்ளூர்மொழியக்கம்செய்யப்பட்ட

இணையத்தளங்களில் பின்வருவன அடங்கும்:

எங்களுடைய சிறப்புத்தன்மை மிக்க, நிதியியல் மொழிபெயர்ப்பு குறித்த இலவச விலைப்புள்ளி ஒன்றைப் பெற இங்கே கிளிக்செய்யவும் அல்லது 65 6570 6028 எண்ணில் எங்களை அழைக்கவும்.