சான்றிதழ்பெற்ற மொழிபெயர்ப்பு

ஒரு சான்றிதழ்பெற்ற மொழிபெயர்ப்பு அல்லது உறுதிமொழிந்த மொழிபெயர்ப்பு எனப்படுவது யாதெனில், சட்டப்பூர்வ அல்லது குடிநுழைவு நோக்கங்களுக்காக அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கத் தேவைப்படும் ஆவணங்களுக்கு ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷன் போன்றதொரு நிறுவனத்தால் அல்லது உறுதிமொழிச் சான்றளிக்கும் நோட்டரி வழக்குரைஞர் ஒருவரால் சான்றிதழ்பெற்ற மொழிபெயர்ப்பு பெறுவதாகும். சான்றிதழ்பெற்ற மொழிபெயர்ப்பு மற்றும் உறுதிமொழிந்த மொழிபெயர்ப்பு இரண்டுக்குமிடையேயான வேறுபாடாவது, முன்னது மொழிபெயர்ப்பு நிறுவனத்தால் கையொப்பம் மற்றும் முத்திரையிட்டு வழங்கப்படுவதாகும் பின்னது நோட்டரி வழக்குரைஞரால் வழங்கப்படுவதாகும். மொழிபெயர்ப்பு நிறுவனங்கள் ஆவணங்களின் மொழிபெயர்ப்புக்கு உறுதிமொழிய இயலாததால், நோட்டரி வழக்குரைஞகர்களைக் கொண்டுள்ள சட்ட அலுவலகங்கள் மட்டுமே உறுதிமொழிந்த மொழிபெயர்ப்பை வழங்க முடியும், இதுபோன்ற சட்ட அலுவலகங்கள் தம்மிடம் மொழிபெயர்ப்பு வசதிகளைக் கொண்டிருந்தால்தான் சான்றிதழ்பெற்ற மற்றும் உறுதிமொழிந்த மொழிபெயர்ப்புகளை வழங்க முடியும்.

ஜனவரி 2016 முதல், நிரந்தர வசிப்பு அல்லது குடியுரிமை விண்ணப்பம் போன்ற விண்ணப்பங்களின் அனைத்து ஆவணங்களையும் ICA-க்குச் சமர்ப்பிக்க வேண்டியதிருந்தால் அந்த ஆவணங்கள் உள்ளூர் நோட்டரி வழக்குரைஞரால் உறுதிமொழியப்பட வேண்டும். இந்தச் சட்டப்பூர்வ நடவடிக்கை முன்பு உயர்நீதி மன்ற (தற்போது குடியரசு நீதிமன்றம் என அழைக்கப்படுகிறது) மொழிபெயர்ப்புத் துறையால் மையப்படுத்திச் செய்யப்பட்டு வந்தது. அவ்வறாயினும், இது போன்ற ஆவணங்களை MOM, MOE, LTA, ACRA, போக்குவரத்துக் காவல்துறை, அல்லது குடியரசு நீதிமன்றம் அல்லது தூதரகங்கள் போன்றவற்றுக்குச் சமர்ப்பிக்கப்பட சான்றிதழ்பெற்ற மொழிபெயர்ப்பு போதுமானது.

சிங்கப்பூர் உயர்நீதி மன்ற மொழிபெயர்ப்புத் துறையுடனான ஒத்துழைப்பில் 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவம் வாய்ந்த, முன்னணி மொழிபெயர்ப்பு நிறுவனங்களுக்குள் ஒன்றான எமது நிறுவனம், மொழிபெயர்ப்பைச் சான்றிதழ் பெற்ற மொழிபெயர்ப்பாக வழங்கும் தனித்தன்மை கொண்ட நிறுவனமாகும். மோசடிகளைத் தவிர்க்கும் பல்வேறு உத்திகளைக் கையாண்டு, சான்றிதழ்பெற்ற மொழிபெயர்ப்பில் தரக்கட்டுப்பாடுகளைப் பின்பற்றி ஆவணங்களின் சட்டப்பூர்வத் துல்லியம் மற்றும் பயன்பாட்டுக்கு உத்திரவாதம் வழங்குகிறோம். ஆவணங்கள் மொழிபெயர்க்கப்பட்ட பின்பு ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷன் நிறுவனம் அவற்றின்மீது “ சான்றிதழ்பெற்ற உண்மையான மொழிபெயர்ப்பு” முத்திரையுடன் அதற்குப் பொறுப்பேற்றுள்ள அலுவலரின் கையொப்பமிடப்பட்டு வழங்கப்படுகிறது, இது சிங்கப்பூர் அரசு அல்லது தூதரகங்கள், பல்கலைக்கழகங்கள், ஆயுள்காப்பீட்டு நிறுவனங்கள், நீதிமன்றங்கள் போன்ற பிற அரசு சார்ந்த, அரசு சாரா நிறுவனங்கள் ஆகிய அனைத்து நிறுவனங்களாலும் மதிப்புடையதாக ஏற்கப்படுகிறது.

மொழிபெயர்ப்பின்போது எமது தரக்கட்டுப்பாட்டு முறை கவனமாகக் கையாளப்படுகிறது. அதாவது ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷனால் சான்றிதழ் அளிக்கப்படும் முன்பு அனைத்து மொழிபெயர்ப்புகளும் இரண்டாவது மற்றும் மூன்றாவது மொழிபெயர்ப்பாளர்களால் தொகுத்தல் மற்றும் படிதிருத்தல் செய்யப்பட்டு எமது தரத்துக்கு உறுதி வழங்கும் மேலாளரால் மீளாய்வு செய்யப்படுகிறது.

ஓரிடச் சேவை

பொதுவான நோக்கங்களுக்கு தேவைப்படும் சான்றிதழ்பெற்ற மொழிபெயர்ப்பை நாங்கள் ஓரிடச் சேவையாக வழங்கும் திறம் பெற்றுள்ளோம், அதாவது, ICA-க்கு சமர்ப்பிக்கத் தேவைப்படும் உங்கள் ஆவணங்களுக்கு மொழிபெயர்ப்பு, சான்றிதழ் மற்றும் உறுதிமொழிதல் ஆகிய அனைத்து சேவைகளும் செய்யப்படும். உங்களது ஆவணங்களை உங்கள் முகவரியில் நேரடியாகப் பெற தூதஞ்சல் சேவையும் எம்மால் செய்துதரப்படும். இது எமது சான்றிதழ்பெற்ற மொழிபெயர்ப்பை உறுதிமொழிய சட்ட அலுவலகத்துக்குச் செல்ல நேரமில்லாத மற்றும் சிக்கலான நடைமுறைகளை விரும்பாத வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய மேற்கொள்ளப்படுகிறது. சுருக்கமாகக் கூறினால்,செலுத்தியதற்கு நீங்கள் பெறவேண்டியதைப் பெற்று மகிழுங்கள்.

நாங்கள் முக்கியமாகக் கையாளும் சான்றிதழ்பெற்ற ஆவணங்களில் உள்ளடங்குபவை:

 • தத்தெடுத்தல் ஆவணங்கள்
 • உறுதிமொழிதல் ஆவணங்கள்
 • ஒப்பந்தங்கள்
 • பிறப்பு/திருமணம்/விவாகரத்து/இறப்புச் சான்றிதழ்கள்
 • சுங்கத்துறை ஆவணங்கள்
 • பட்டயங்கள், பள்ளி ஆவணங்கள், பட்டச் சான்றிதழ்கள்
 • பட்டமளிப்புச் சான்றிதழ்கள்
 • அடையாள அட்டை
 • குடிநுழைவு மற்றும் குடியுரிமைபெறல் ஆவணங்கள்
 • உரிமங்கள்
 • மருத்துவ/மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் சான்றிதழ்கள்
 • கடவுச்சீட்டுகள்
 • நிரந்தர வசிப்புச் சிற்றேடுகள்
 • காவல்துறை அறிக்கைகள்
 • பவர் ஆஃப் அட்டர்னி
 • சொத்து ஆவணங்கள், வீடுநில வணிக ஆவணங்கள்
 • பரிந்துரைக் கடிதங்கள்
 • வரி செலுத்தல் ஆவணங்கள்
 • வர்த்தக இலச்சினைப் பதிவு
 • VATகைசாற்றுகள்
 • தொலைத்தொடர்புப் பணமாற்றல் பற்றுச்சீட்டுகள்

எங்களுடைய சிறப்புத்தன்மை மிக்க, நிதியியல் மொழிபெயர்ப்பு குறித்த இலவச விலைப்புள்ளி ஒன்றைப் பெற இங்கே கிளிக்செய்யவும் அல்லது 65 6570 6028 எண்ணில் எங்களை அழைக்கவும்.