படிதிருத்துதல்

படிதிருத்துதல் என்பது மொழிபெயர்க்கப்பட்ட ஓர் உரையை, மூல உரையுடன் ஒப்பிட்டுப் பார்த்து, அதில் தட்டச்சுப்பிழைகள், இலக்கணப் பிழைகள், தவறவிடுதல்கள் அல்லது வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்களின் பொருந்தாப் பயன்பாடுகள் ஆகிய எவையும் இல்லை என்று உறுதிசெய்வதாகும். அத்துடன் கூடுதலாக, மொழிபெயர்ப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல்வளத்தின் பாணி மற்றும் நிலைப்புத்தன்மையைச் சரிபார்ப்பதையும் படிதிருத்துதல் உள்ளடக்கியுள்ளது. படிதிருத்துதலின்மூலம் உரையை மேம்படுத்துவதற்கும், சொல்வளத்தைத் தரப்படுத்துவதற்குமான பின்னூட்டம் அல்லது பரிந்துரை ஒன்றினைப் பிழைதிருத்துனர் வழங்கவேண்டும்.

தரம் வாய்ந்த ஒரு மொழிபெயர்ப்பு அவசியம் படிதிருத்தப்படவேண்டும். பிழையைக் கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு ஆவணத்தை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் அதற்கு மிகவும் நெருக்கமாக இருந்துவிடக் கூடும். ஆவணத்தைப் புதியதாகப் பார்க்கின்ற புதிய பார்வை மீளாய்வு செய்வதற்குத் தேவைப்படுகிறது.. குறிப்பாகப் பிரசுரிக்கப்படவுள்ள ஒரு மொழிபெயர்ப்புக்கு இது மிகவும் அவசியம் ஆகும். ஏனெனில், அச்சிடுவதற்குக் கோப்பை அனுப்புவதற்குச் சற்றே முன்னதாக ஒரு பிழை கண்டுபிடிக்கப்படும்போது எதுவும் செய்யமுடியாமல் போய்விடும்.g.

எங்களுடைய தரக்கட்டுப்பாட்டுச் செயல்முறையின் படிநிலைகளில் ஒன்று என்ற முறையில், படிதிருத்துதல் எங்களது அக மொழிபெயர்ப்புகள் குறையற்றவையாக இருப்பதை உறுதிசெய்வதில் முக்கியமான பங்கினை ஆற்றுகிறது. ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷனில் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்ட சொற்களஞ்சியத் தரவுத்தளங்கள், மொழிபெயர்ப்பு பாணிக்கான வழிகாட்டிகள் மற்றும் விரிவான செயல்முறைகளைப் பயன்படுத்தி, இரண்டு அனுபவம் வாய்ந்த, தகுதியான படிதிருத்துனர்கள் மூலமாகப் பிழைதிருத்துதல் பூர்த்திசெய்யப்படுகிறது. முதல் படிதிருத்துனர், இலக்கு மொழி மூல மொழியின் பொருளைத் துல்லியமாகப் பிரதிபலிக்கிறதா என்பதை உறுதிசெய்யும் பொறுப்பை உடையவர் ஆவார். இரண்டாம் படிதிருத்துனர், எழுதுதலின் அனைத்துப் பயன்பாடுகளும், பாணியும் வழக்கமாகவே சரியானதாகவும், நிலைப்புத்தன்மை கொண்டவையாகவும் உள்ளனவா என்பதை உறுதிசெய்யும் பொறுப்பை உடையவர் ஆவார். இது, மொழிபெயர்க்கப்பட்ட உரை சரளமான ஓட்டத்தை உடையதாக இருப்பதை மட்டுமன்றி, அது பிழை-அற்றதாக இருப்பதையும் முடிவாக உறுதிசெய்கிறது.

அக மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ஆவணங்களைத் தவிர, மற்றொரு நிறுவனம் மூலமாகத் தங்களுடைய ஆவணங்களை மொழிபெயர்த்து, அந்த மொழிபெயர்ப்பைத் திருப்தியற்றதாகக் கருதும் வாடிக்கையாளர்களுக்குப் படிதிருத்துதல் சேவையையும் நாங்கள் வழங்குகிறோம். சட்ட அல்லது நிதியியல் மொழிபெயர்ப்புகளைப் பொருத்தவரை, வழக்கமாக இவ்வாறு நடைபெறுவது உண்மையாக உள்ளது. முறையான மூலாதார வளங்கள் இல்லாத காரணத்தால், சில முகமைகளுக்குத் தரமாக மொழிபெயர்க்கும் ஆற்றல் இல்லாமல் போய்விடுகிறது. இவ்வாறாகப், பிற முகமைகளின் வாடிக்கையாளர்களும் எமது சேவையை நாடுகின்றனர்.

எங்களுடைய சிறப்புத்தன்மை மிக்க, நிதியியல் மொழிபெயர்ப்பு குறித்த இலவச விலைப்புள்ளி ஒன்றைப் பெற இங்கே கிளிக்செய்யவும் அல்லது 65 6570 6028 எண்ணில் எங்களை அழைக்கவும்.