மொழிபெயர்ப்புகள்

மொழிபெயர்ப்பு என்பது விரிந்த, ஆழமான, தேர்ச்சிபெறுவதற்குச் சிரமமான கலை ஆகும். ஒரு அழகான கட்டுரையை எழுதுவது எளிதானதாகும். ஆனால் அதற்கான நேர்த்தியான மொழிபெயர்ப்பு ஒன்றை உருவாக்குவது கடினமானதாகும். இதற்கு மொழிபெயர்ப்பாளர்கள் சிறந்த இருமொழி ஆற்றல் மட்டுமன்றி, அதற்கு பொருத்தமானப் பின்புல அறிவைப் பெறுவதற்காகச் சற்றுக் கடினமாக உழைக்க வேண்டியிருப்பதும் இதற்குத் தேவையாக உள்ளது.

ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷனைப் பொருத்தவரை, நாங்கள் உங்களுடைய வணிகத் துறையைச் சார்ந்த தொழில்முறைத் தகுதிகளைக் கொண்ட, தாய்மொழியில் மொழிபெயர்க்கின்ற மொழிபெயர்ப்பாளர்களை மட்டுமே பணியமர்த்துகிறோம். அனைத்து மொழிபெயர்ப்பாளர்களும், ஆங்கிலத்திலிருந்து அவர்களது தாய்மொழியில் மட்டுமே மொழிபெயர்க்கிறார்கள். எதனை மொழிபெயர்க்கிறார்களோ அதனைத் தொழில்முறை கலைக்களஞ்சிய அறிவுடன் புரிந்துகொண்டுள்ளார்கள். நீங்கள் 100% திருப்தி அடைவதற்கு, மொழிபெயர்ப்ப்பை முழுமையாக வழங்குவதற்கான ஒவ்வொரு முயற்சியையும் அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.

“நம்பகம், சரளம் மற்றும் நளினம்” ஆகிய தத்துவங்களை உள்ளடக்கியதாக ஒரு நல்ல மொழிபெயர்ப்பு அமைந்திருக்கவேண்டும். அது வெறுமனே மொழியை மட்டும் மொழிபெயர்க்கின்ற வேலை அல்ல. அது ஒரு கலாச்சாரத்தையும் மொழிபெயர்க்கின்ற வேலை ஆகும். நீங்கள் ஒருபோதும் ‘வார்த்தைகளை’ மொழிபெயர்க்க முடியாது, கருத்துகளையே மொழிபெயர்க்கிறீர்கள் என்று சொல்வதுண்டு. ஆகவே, ஓர் உரைப்பகுதியை நாம் மொழிபெயர்க்கும்போது, வெறுமனே சொற்பொருள் சார்ந்து அல்லது சொல்லுக்குச் சொல் என்ற முறையில் அதனைச் செய்யாமல், இயற்கையான உணர்வுடன் மொழிபெயர்ப்புத் திகழ எப்போதும் கவனமாக இருக்கிறோம்.

எங்களுடைய தரக்கட்டுப்பாட்டுச் செயல்முறையின் தேவைக்கேற்ப, சிறிய திட்டப்பணிகள் பொதுவாக ஒரு மொழிபெயர்ப்பாளர், ஒரு திருத்துனர் மற்றும்/அல்லது பிழைதிருத்துனர் மற்றும் தரத்தை உறுதிப்படுத்தும்  மேலாளர் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவை உள்ளடக்கியதாகவும், பெரிய திட்டப்பணிகள், ஒன்று அல்லது பல குழுக்களையும், இந்தக் குழுவை (குழுக்களை) இணைக்கின்ற ஒரு திட்டப்பணி மேலாளர், ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுனர், மற்றும்/அல்லது ஒரு டி.டி.பி. வல்லுனர் ஆகியோரையும் உள்ளடக்கியதாகவும் இருக்கும்.

எங்களது சேவையைப் பொருத்தவரை சிறப்பம்சமாகக் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் பெரிய, கடினமான திட்டப்பணிகளையும் சாத்தியமான மிகக் குறைவான முடித்துக்கொடுத்தல் நேரத்துக்குள் வழங்கும் சக்தி எங்களிடம் உள்ளது என்பதாகும். இச்சிறப்பம்சதினால், தாலெஸ், எம்பிஆர்ஐ, சிங்டெல், கிலென்கோர், எம்எஃப் குளோபல், பிஎஸ்ஏ இண்டர்நேஷனல், சிங்கப்பூர் டெக்னாலஜிஸ் முதலான நிறுவனங்கள் எங்களை மிகவும் நம்பகமான மொழிபெயர்ப்பு நிறுவனமாகக் கருதுகின்றன. ஏனென்றால், ஒரு வேலையைச் செய்துகொடுக்கும்படி உறுதிப்படுத்திய பிறகு, அது உரிய நேரத்தில் முடிக்கப்பட்டு வழங்கப்படுகிறதா என்று அவர்கள் கவலைப்படத் தேவையில்லை.

இரத்தினச்சுருக்கமாக,  உங்கள் மொழிபெயர்ப்பு வேலை சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும், எளிமையானதாக இருந்தாலும், கடினமானதாக இருந்தாலும், ஒரே அளவு கவனத்துடனும், விடாமுயற்சியுடனும் உங்களுக்கு உதவுவதற்கு நாங்கள் எப்போதுமே காத்திருக்கிறோம்.

மொழிபெயர்ப்பு என்று வரும்போது, எங்களுடைய பணி, முக்கியமாக, ஆங்கிலம் மற்றும் பிற முக்கிய ஐரோப்பிய மொழிகளில் இருந்தும், சீனமொழி மற்றும் பிற முக்கிய ஆசிய மொழிகளுக்கு மொழிபெயர்ப்பதையோ அல்லது இதற்கு எதிர்மாறாக அல்லது குறுக்கு-நெடுக்காக மொழிபெயர்ப்பதையோ உள்ளடக்கியதாக உள்ளது.

சிறப்புத்துறைகளைப் பொருத்தவரை, பின்வருவன உள்ளிட்ட 8 சிறப்புத்துறைகளில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்:

  • நிதியியல் மொழிபெயர்ப்பு
  • சட்ட மொழிபெயர்ப்பு
  • உயிர் அறிவியல் மொழிபெயர்ப்பு
  • தொழிற்துறை மொழிபெயர்ப்பு
  • வர்த்தக மொழிபெயர்ப்பு
  • வான்வழி/கப்பற்போக்குவரத்து மொழிபெயர்ப்பு
  • சீனமொழி இலக்கிய மொழிபெயர்ப்பு
  • சான்றிதழ்பெற்ற மொழிபெயர்ப்பு

எங்களுடைய சிறப்புத்தன்மை மிக்க, மொழிபெயர்ப்புச் சேவைகள் குறித்த இலவச விலைப்புள்ளி ஒன்றைப் பெற இங்கே கிளிக் செய்யவும் அல்லது +65 6570 6028 எண்ணில் எங்களை அழைக்கவும்.