ஒலிப்புக்கேற்ப எழுதுதல்

நகரத்திலேயே மிகவும் சகாயமான கட்டணத்தில், தொழில்முறை ஒலிப்புக்கேற்ப எழுதுதல் சேவைகளை நாங்கள் வழங்குகிறோம்.

சிங்கப்பூரில் ஒலிப்புக்கேற்ப எழுதுதல் சேவை நீதிமன்ற விசாரணைகளுக்காக பெரும்பாலும் தேவைப்படுகிறது. ஆங்கிலம் சிங்கப்பூரின் அதிகாரபூர்வமான ஒரு மொழியாக இருப்பதால், அனைத்து ஒலிப்புக்கேற்ப எழுதுதல்களும் அடிப்படையாக ஓர் ஆசிய அல்லது ஐரோப்பிய மொழியில் இருந்து ஆங்கிலத்துக்குச் செய்யப்படுவதாக உள்ளது.

ஒலிப்புக்கேற்ப எழுதுதல் என்பது, எங்களுடைய தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்கள்

உங்களுடைய வீடியோவைப் பார்த்து அல்லது உங்களுடைய ஒலிப்பதிவைக் கவனித்து, தொடர்புடைய பேச்சினை அது பேசப்படும் மொழியிலேயே, அதனை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பதற்கு முன்பாகத் தட்டச்சு செய்வதை உள்ளடக்கியதாகும். மிகவும் அடிக்கடி, ஒரு ஒலி நாடா மாண்டரின், ஹோக்கியென், காண்டோனீஸ் முதலான பல வட்டாரப் பேச்சுமொழிகளைக் கொண்டதாக இருக்கும். இத்தகைய சூழ்நிலைகளில், நீங்கள் உடனே பயன்படுத்துவதற்கு வசதியாக ஒரு முழுமையான ஆங்கில எழுத்தாக்கத்தை உருவாக்குவதற்கு நாங்கள் பல்வேறு மொழித்திறனாளர்களை ஒரு கூரையின் கீழ்ப்பயன்படுத்தும் முயற்சியை மேற்கொள்ளுவோம்.

சிடி, டிவிடி, வீடியோ நாடாக்கள், MP3, mpeg அல்லது wav போன்ற எந்த வகையான ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளையும், சாதாரணமான வகையைச் சேர்ந்த நாடாவையும் எங்களால் கையாள முடியும். உங்களுடைய கோப்பின் வடிவம் மேலே பட்டியலிலிடப்பட்டிருப்பவற்றில் இல்லை என்றால், தயவுசெய்து எங்களுக்குத் தெரிவியுங்கள். எங்களால் இது தொடர்பான உதவியை உங்களுக்கு வழங்க முடியும்.

Just எங்களுடைய சிறப்புத்தன்மை மிக்க, ஒலிப்புக்கேற்ப எழுதுதல் சேவை குறித்த இலவச விலைப்புள்ளி ஒன்றைப் பெற இங்கே கிளிக்செய்யுங்கள் அல்லது +65 6570 6028 என்ற எண்ணில் எங்களை அழையுங்கள்