நிதியியல் மொழிபெயர்ப்பு

நிதியியல் மொழிபெயர்ப்பை எடுத்துக்கொண்டால், ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷனின் சேவையானது அதன் துல்லியம், சந்தைக்கு விரைவாக அனுப்புதல், முதல்தரமான வாடிக்கையாளர்சேவைத் திருப்தி, வழங்கப்பட்ட சிக்கன நிதிக்குள் தரம் மிக்க வேலையை முடித்துக்கொடுக்கும் ஆற்றல் ஆகியவற்றுக்காகப் புகழ்வாய்ந்ததாகும். இங்கு, நிதியியல் மொழிபெயர்ப்பைப் பொருத்தவரை, தொழில்துறைத் துல்லியம், வேறு எந்த மொழிபெயர்ப்பையும் விட மறுக்கப்படாத மிக முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், துல்லியமற்றத்தன்மை ஒரு வாடிக்கையாளரின் வருவாய் வாய்க்கால்களை வெகுவாகப் பாதித்துவிடக்கூடும்.

ஒரு வாடிக்கையாளர், தமது நிதியியல்ஆவணங்களாகிய, நிதியியல் வாக்குமூலங்கள், நிதி அறிக்கைகள், விளக்கக் கையேடு போன்றவற்றை மொழிபெயர்ப்பதில் ஒரு மொழிபெயர்ப்பு நிறுவனத்துக்கு இருக்கும் ஆற்றலைக் குறித்து எப்போதும் எச்சரிக்கையாக இருக்கிறார். ஏனென்றால், நிதியியல் மொழிபெயர்ப்பை சில மொழிபெயர்ப்பாளர்களால் மட்டுமே திருப்திகரமாக உருவாக்கமுடியும் என்னும் அளவுக்கு அது மிகவும் சிறப்புத்தன்மை மிக்கதும், வழக்கமாக மிகவும் தெளிவில்லாததாகக் கருதப்படுவதும் ஆகும். வாடிக்கையாளர், அவர் ஒப்பந்தத்தை யாருக்கு வழங்கப்போகிறார் என்று முடிவுசெய்வதற்கு முன்பாக, மொழிபெயர்ப்பு நிறுவனங்களைப் பரிசோதனை மொழிபெயர்ப்புக்காக அணுகுகிறார் என்னும் உண்மையே மொழிபெயர்ப்பு குறித்து அவர்களுக்கு இருக்கும் அழுத்தமான கவலைகளைப் பற்றிய மிகச்சிறந்த அறிகுறி ஆகும்.

வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள், கணக்கியல் நிறுவனங்கள், சொத்து நிர்வாக நிறுவனங்கள் முதலியவற்றுடன், இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப்பணியாற்றிய அனுபவத்துடன், ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷன் இப்போது, வங்கி நிறுவனங்கள் மற்றும் வங்கியல்லாத நிறுவனங்கள் இரண்டுக்குமே நிதியியல் மொழிபெயர்ப்புச் சேவையை வழங்குவதில், சிங்கப்பூரின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. கணக்கியல், பொருளாதாரம், நிதியியல், எம்பிஏ அல்லது மற்ற தொடர்புடைய புலங்களில் சிறப்புக் கல்வித்தகுதியுடைய, நிதி தொடர்பான மொழிபெயர்ப்பு மேதைகள் பெருமளவு எண்ணிக்கையில் எங்களிடம் உள்ளதால், இத்தொழிலில் மிகவும் முழுமையான வாடிக்கையாளர் சேவையை வழங்கவும், எந்த நிதியியல் மற்றும் கணக்கியல் ஆவணங்களையும் உயர்தரமான தொழில்முறைப் பாங்குடன் மொழிபெயர்ப்பதற்கான எவ்விதத் தேவைகளையும் பூர்த்திசெய்யவும் எங்களால் முடிகிறது.

மோசமான நிதியியல் மொழிபெயர்ப்பு உங்களுடைய நிதியியல் அம்சங்களை மோசமானவையாக ஆக்கிவிடக்கூடும் என்பதால், நிதியியல் ஆவணங்களை நன்றாக மொழிபெயர்ப்பதற்கு நிதித்துறை வல்லுனர்கள் இருந்தால் மட்டும் போதாது, அவற்றைச் சிறப்பான முறையில் திருத்துவதற்கு, நிதியியல் திருத்துனர்களும் தேவை என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள்.

நாங்கள் முக்கியமாகக் கையாளுகின்ற நிதியியல் ஆவணங்களில் பின்வருவன அடங்கும்:

 • கணக்குப் புத்தகங்கள்
 • கணக்கியல் விதிகள் மற்றும், ஒழுங்குமுறைகள்
 • வருடாந்திர அறிக்கைகள்
 • சொத்து மதிப்பீட்டு அறிக்கைகள்
 • தணிக்கையாளரின் அறிக்கைகள்
 • நிதிக் கணக்கியல்
 • நிதியியல் பொருட்கள்
 • நிதியியல் வாக்குமூலங்கள்
 • நிதிப் பொருண்மை தாள்கள்
 • இணைத்தல்கள் மற்றும் கையகப்படுத்துதல்கள்
 • மாதாந்திர நிதியறிக்கைகள்
 • காப்பீடுக் கோருதல் அறிக்கைகள்
 • காப்பீட்டுப் பாலிசிகள்
 • முதலீட்டு வரைவுகள்
 • முதலீட்டாளர் மேம்படுத்தல்கள்
 • ஐபிஓ விளம்பரங்கள்
 • ஐபிஓ விளக்கக்கையேடுகள்

எங்களுடைய சிறப்புத்தன்மை மிக்க, நிதியியல் மொழிபெயர்ப்பு குறித்த இலவச விலைப்புள்ளி ஒன்றைப் பெற இங்கே கிளிக்செய்யவும் அல்லது 65 6570 6028 எண்ணில் எங்களை அழைக்கவும்.