உயிர் அறிவியல்/மருத்துவ மொழிபெயர்ப்பு

புற்றுநோய், நீரிழிவு, பக்கவாதம், மாரடைப்பு, மூப்பு மறதிநோய் அல்லது நாள்பட்ட நுரையீரல் சம்பந்தப்பட்ட சுவாசநோய் (சிஓபிடி) போன்ற சில கடினமான அல்லது நாள்பட்ட நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான புதிய மருந்து அல்லது மருத்துவ சாதனத்தைச் சந்தையில் வெற்றிகரமாக விற்பனைக்குக் கொண்டுவருவதற்கு முன்பாக, மருந்து நிறுவனங்கள், அவற்றை ஒப்பந்த ஆராய்ச்சி அமைப்புகளின் (சிஆர்ஓ -க்கள்) மூலமாக, நோயாளிகளிடையே/பங்கேற்பாளர்களிடையே, அவற்றின் மருத்துவ விளைவுகள் மற்றும் பக்கவிளைவுகளைப் புரிந்துகொள்வதற்காகப் பரிசோதிக்க வேண்டும். பரிசோதனைகள் பல நாடுகளில் நடைபெறும் என்பதால், மருந்து நிறுவனங்கள் மற்றும் சிஆர்ஓ –க்கள், ஆய்வு ஆவணங்களைக் கலாச்சாரத்துக்கேற்றவையாகவும், மூல உள்ளடக்கத்துக்கு சமானமானவையாகவும், பரிசோதனை நடைபெறும் நாட்டின் மக்களுக்கு ஏற்புடையவையாகவும் ஆக்குவதற்காக, மொழியியல் சரிபார்த்தல் மற்றும் மருத்துவப் பரிசோதனை மொழிபெயர்ப்புச் சேவைகளில் திறன்மிக்க அணுகுமுறைகளை வழங்கும் நிறுவனங்களை நாடுகிறார்கள்.

ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷன் 2000-ஆம் ஆண்டு முதல் ஒப்பற்ற மொழியியல் சரிபார்த்தல் மற்றும் மருத்துவப் பரிசோதனை மொழிபெயர்ப்புச் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட, உயர்தர சிறப்பு மிக்க இருமொழித் திறமையாளர்களின் மூலம் பல மருந்து நிறுவனங்கள் மற்றும் சிஆர்ஓ –க்களுடன் கூட்டாக இணைந்து, மொழியியல் சரிபார்த்தலை ஏற்புடையதாக்க, அவர்களுடைய மருந்து/மருத்துவப் பரிசோதனை ஆவணங்களைச் சர்வதேச ஒழுங்குமுறை மொழித் தேவைவிதிகளுக்கு இணங்க முன்னோக்கியும், பின்னோக்கியும், ஆங்கிலத்திலிருந்து எளிமைப்படுத்திய சீன மொழி, பாரம்பரியச் சீன மொழி, ஜப்பானிய மொழி, மலாய் மொழி, இந்தோனேஷிய மொழி, தமிழ் மொழி, டாகலாக் மொழி, தாய்லாந்து மொழி, வியட்னாம் மொழி, கொரிய மொழி, வங்காள மொழி உள்ளிட்ட அனைத்து முக்கியமான ஆசிய மொழிகளுக்கும் மொழிபெயர்த்துவருகிறது.

நாங்கள் முக்கியமாகக் கையாளுகின்ற உயிர் அறிவியல் ஆவணங்களில் பின்வருவன அடங்கும்:

 • நோயாளி அறிக்கைப் படிவங்கள் (சிஆர்எஃப் -கள்)
 • இழப்பீட்டு தகவல்
 • மருந்துப் பெட்டிச் செருகல்கள்
 • தகவலளிக்கப்பட்ட ஒப்புதல் படிவங்கள் (ஐசிஎஃப் -கள்)
 • பரிசோதிக்கப்படும் புதிய மருந்துப் பயன்பாடுகள் (ஐஎன்டிஏ -கள்)
 • மருத்துவஇதழ்க் கட்டுரைகள்
 • லேபில்கள்/விவரச்சீட்டுகள்
 • பொருள் பாதுகாப்புத் தரவுத் தாள்கள் (எம்எஸ்டிஎஸ் -கள்)
 • மருத்துவ உபகரணங்களுக்கான கட்டளைக் கையேடுகள்
 • புதிய மருந்துப் பயன்பாடுகள் (என்டிஏ -கள்)
 • நோயாளியால் தெரிவிக்கப்பட்ட முடிவுகள் (பிஆர்ஓ) கேள்விப்பட்டியல்கள்
 • ஆய்வு அறிக்கைகள்
 • ஆய்வு நெறிமுறைகள்
 • நோயாளி நாட்காட்டிகள்
 • சுருக்கஉரைப் பக்கங்கள்
 • மருந்து நிறுவனங்களுக்கான தரப்படுத்திய இயங்குதல் நடைமுறைகள் (எஸ்ஓபி -கள்)
 • பரிசோதனை அறிக்கைகள்
 • தொடர்புடைய மற்ற ஆவணங்கள்

அனைத்து மொழிபெயர்ப்புகளும், திருத்தப்பட்டு, படிதிருத்தப்பட்டு, சரிபார்க்கப்பட்ட பிறகு, ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷன் மூலமாக எமது அறிவுக்கும், நம்பிக்கைக்கும் எட்டியவரையில் சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது என்பதற்கான சான்று அளிக்கப்படுகிறது. மாற்றுஏற்பாடாக, மொழிபெயர்ப்பாளரிடமிருந்து, வாடிக்கையாளர் வழங்கும் மொழிபெயர்ப்புக்கான சான்றிதழில் தனிப்பட்டமுறையில் அவர் தனது அறிவுக்கும், நம்பிக்கைக்கும் எட்டியவரையில் சிறப்பாக மொழிபெயர்ப்பைச் செய்துள்ளார் என்று அறிவித்துக் கையெழுத்திட்டு அளிக்கும் வகையிலும் சான்றளிப்பு வழங்கப்படுகிறது.

மருந்து/மருத்துவப் பரிசோதனை ஆவணங்களைப் போலவே, மருத்துவக் சிற்றேடுகள், உடல்நலப் பராமரிப்புச் சிற்றேடுகள், நோயாளித் தகவல், நோய்த் தடுப்புத் துண்டுப்பிரசுரங்கள் முதலியவற்றை, நாங்கள் தேசியத் தோல் மையம், சாங்கி ஒருங்கிணைந்த மருத்துவமனை, மன நல நிறுவனம், மவுண்ட் அல்வெர்னியா மருத்துவமனை, டான் டாக் செங் மருத்துவமனை, தேசிய உடல்நலப் பராமரிப்புப் பிரிவு ஆகியவை உள்ளிட்ட பல உள்ளூர் மருத்துவ நிறுவனங்களுக்காகவும், மருத்துவமனைகளுக்காகவும், தொடர்ந்து மொழிபெயர்த்து வருகிறோம்.

எங்களுடைய சிறப்புத்தன்மை மிக்க நிதியியல் மொழிபெயர்ப்பு இலவச விலைப்புள்ளிக்கு இங்கே கிளிக் செய்யவும் அல்லது 6565706028 எண்ணில் எங்களை அழைக்கவும்.