ஒரு நல்ல மொழிபெயர்ப்புக்குத் திருத்துதல் அவசியமான ஒன்றாகும். ஒவ்வொரு மொழிபெயர்ப்புக்கும், தொழில்முறை மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் சேவைகள் தேவைப்படுவதைப் போலவே, திருத்துனர் ஒருவரின் மற்றும் படிதிருத்துனர் ஒருவரின் சேவைகளும் தேவைப்படுகின்றன. மொழிபெயர்ப்பாளர் மற்றும் படிதிருத்துனரின் பங்கை விட, திருத்துனர் ஒருவரின் பங்கு ஓரளவுக்கு இன்னும் கூட அதிகமான முக்கியத்துவம் கொண்டதாகும். ஏனெனில், மொழிபெயர்ப்புப்பின் தரத்துக்கு ‘இறுதியான ஒப்புதலைக்’ கொடுத்து, இலக்கு மொழியின் இயற்கையான ஓட்டத்தை உறுதிசெய்து, மொழிபெயர்க்கப்பட்ட சாயலே இல்லாமல் பார்த்துக்கொள்பவர் திருத்துனரே ஆவார். ஆகவே, ஒரு திருத்துனர் பொதுவாக தொழில்முறையாக மொழிபெயர்க்கும் ஆற்றலைக் கொண்டவராக இருப்பார் ஆனால் ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு தொழில்முறையாகத் திருத்தும் ஆற்றல் இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
மொழிபெயர்ப்புத் தொழில்துறையில், ‘திருத்துதல்’ என்னும் சொல் அடிக்கடி தவறாகப் பயன்படுத்தப்படும் சொல்லாகவே உள்ளது. அது பலராலும் ‘படிதிருத்துதல்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், உண்மையில் அதன் பொருள் அதுவன்று. ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷனில், நாங்கள் படிதிருத்துதலுக்கு முன்பாக, சொல்வளம், பாணியில் நிலைப்புத்தன்மை மற்றும் எழுதுவதில் சீரான ஓட்டம் ஆகியவற்றின் துல்லியத்தையும், பொருத்தமுடைமையையும் உறுதிசெய்வதற்காக, அனைத்து மொழிபெயர்ப்புகளையும் திருத்துகிறோம். இதற்கான காரணம் எளிமையானது மற்றும் தெள்ளத்தெளிவானது: தரம்!
எங்களுடைய சிறப்புத்தன்மை மிக்க, நிதியியல் மொழிபெயர்ப்பு குறித்த இலவச விலைப்புள்ளி ஒன்றைப் பெற இங்கே கிளிக்செய்யவும் அல்லது 65 6570 6028 எண்ணில் எங்களை அழைக்கவும்.