Raffles Translation - Offers translation services in Singapore and worldwide

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

பொருள்விளக்கச் சேவை

சர்வதேசக் கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்கங்களை நடத்துவதற்குச் சிறந்த இடமாக விளங்கும் ஆசியாவின் முக்கியமான மையமான சிங்கப்பூரில் அமைந்திருப்பதால், ராஃபிள்ஸ் மொழிபெயர்ப்பு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு தொழில்முறை பொருள்விளக்கச் சேவைகளை வழங்குவதற்கேற்ற மிகவும் சிறப்பான இடத்தில் உள்ளது.

தொடர்ச்சியான பொருள்விளக்கம், உடன்நிகழ்கின்ற பொருள்விளக்கம், தொலைநிலைக் கருத்தரங்கப் பொருள்விளக்கம், வழித்துணைப் பொருள்விளக்கம் முதலானவை உள்ளிட்ட மேலும் பல பொருள்விளக்கச் சேவைகளைப் பொருள்விளக்கச் சேவைகள் தேவைப்படும் அனைத்துச் சூழ்நிலைகளிலும், முக்கியமான ஆசிய மொழிகளில் வழங்கக்கூடிய உயர்தர அனுபவத்தைக் கொண்ட பொருள்விளக்குனர்களை ராஃபிள்ஸ் மொழிபெயர்ப்பு வழங்குகிறது.

தொடர்ச்சியான பொருள்விளக்கம்
தொடர்ச்சியான பொருள்விளக்கம் என்பது, மிகவும் பொதுவான பொருள்விளக்க வகையைச் சார்ந்தது ஆகும். இதன்படி, உங்களுடைய பேச்சாளர் சில வாக்கியங்களைப் பேசிவிட்டுப் பிறகு நிறுத்திக் கொள்வார். எங்களுடைய தொடர்ச்சியான பொருள்விளக்குனர் அவர் பேசியவற்றை வேறொரு மொழியில் மொழிபெயர்த்துச் சொல்வார்.

தலத்திலேயே நடைபெறும் தொடர்ச்சியான பொருள்விளக்கம், பெரும்பாலும் ஆய்வரங்கங்கள், நேர்காணல்கள், பயிற்சி அமர்வுகள், வணிகச் சந்திப்புகள், மருத்துவக் கலந்தாய்வு, திருமணப் பதிவு, செய்தி வெளியீடுகள், நீதிமன்ற விசாரணைகள் முதலானவை தொடர்பாகவும், ஒரு கருத்தரங்கத்தில் பங்கேற்றிருக்கும் தனிநபர் ஒருவரிடம் இரகசியமாகப் பிறர் காதில் விழாதவாறு பேசுவது தொடர்பாகவும்கூட, சிறிய குழுவினருக்காக அல்லது ஒருவர் மற்றொருவரை நேரடியாகச் சந்திக்கும் நிகழ்ச்சிகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

உள்ளபடியே பொருள்விளக்கம் கூறுதல் பேச்சு நிகழும் அதே நேரத்தில் மேற்கொள்ளப்படுவதில்லை. இதற்கென்று சிறப்புக் கருவி எதுவும் தேவையில்லை. உடன்நிகழ்கின்ற பொருள்விளக்கத்துக்கு ஆகக்கூடிய கட்டணத்தோடு ஒப்பிடுகையில் இதற்கு ஆகும் கட்டணமும் கணிசமான அளவுக்கு மலிவானதே ஆகும்.

உடன்நிகழ்கின்ற பொருள்விளக்கம்
உடன்நிகழ்கின்ற பொருள்விளக்கம் என்பது, அதன் பெயரிலேயே விளக்கம் அடங்கியுள்ளதைப் போல, உங்களுடைய பேச்சாளர் என்ன சொன்னார் என்பதைக் கிட்டத்தட்ட அதே நேரத்தில் பொருள்விளக்குனர் மொழிபெயர்த்து வழங்குவதாகும். உடன்நிகழ்கின்ற பொருள்விளக்கம், பொதுவாக முறைமையான சர்வதேசக் கருத்தரங்கங்களின்போது பயன்படுத்தப்படுகிறது.

உடன்நிகழ்கின்ற பொருள்விளக்கச் சேவையை வழங்கும்போது, எங்களுடைய பொருள்விளக்குனர்கள் (பொதுவாக ஒரு ஜோடி மொழிக்கு இரண்டு பேர்) ஒலிபுகமுடியாத அறைக்குள் அமர்ந்து, ஒருவர் மாற்றி ஒருவர் பணிபுரிந்து, பேராளர்கள் அனைவரும் புரிந்துகொள்ள வசதியாக ஓர் ஒலியுதவிக் கருவியின் மூலமாகப் பார்வையாளர்களுக்கு தமது மொழிபெயர்ப்பினை ஒலிபரப்புவார்கள்.

உடன்நிகழ்கின்ற பொருள்விளக்கச் சேவை பேச்சு நிகழும் அதே நேரத்தில் மேற்கொள்ளப்படுவதாலும், இரண்டாவது வாய்ப்புகள் என்று எவையும் இல்லை என்பதாலும், முதல்முறையாகக் கேட்கும்போதே பொருள்விளக்குனர்கள் சரியாகப் புரிந்துகொண்டாகவேண்டும். உள்ளபடியே, இதற்கு மிகவும் உயர்ந்த அளவிலான பொருள்விளக்கத் திறனும், மிகவும் விரைவான எதிர்வினை வேகமும் தேவை. உங்களுக்கு உறுதியளிக்கும் வகையில், எங்களுடைய அனைத்து உடன்நிகழ்கின்ற பொருள்விளக்குனர்களும் குறைந்தபட்சம் 6 வருடத் தொழில்முறை அனுபவம் உடையவர்களாக உள்ளனர். அத்துடன், இவர்களில் பலரும் சட்டம், மருத்துவம், உயிரியல், தகவல் தொழில்நுட்பம், வங்கியியல் அல்லது நிதி போன்ற அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் களங்களில் ஆழமான அறிவைக் கொண்டுள்ளனர்.

பொருள்விளக்கக் கருவி
உடன்நிகழ்கின்ற பொருள்விளக்குனர்களை வழங்குவதோடு, எந்த பிரச்சனைகள் எழுந்தாலும் அதனைச் சமாளிப்பதற்காக, கூட்ட நேரம் முழுவதும் தலத்திலேயே இருக்கக்கூடிய, அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர் ஒருவரையும் சேர்த்துக் கருத்தரங்கப் பொருள்விளக்கக் கருவியையும் நாங்கள் வாடகைக்கு வழங்குகிறோம்.

தொலைநிலைக் கருத்தரங்கப் பொருள்விளக்கம்
தொலைநிலைக் கருத்தரங்கப் பொருள்விளக்கம் என்பது ஒரு சிறிய கூட்டத்தை நடத்துவதற்கு மிகவும் திறமையான, கட்டணம் குறைவான வழியாகும். எங்களுடைய தொடர்ச்சியான பொருள்விளக்குனர், எங்களுடைய வளாகத்தில் இருந்து உங்களுடைய நோக்கத்தைப் பூர்த்திசெய்யும் வகையில் கூட்டத்துக்கான பொருள்விளக்கச் சேவையை அளிப்பார். நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் கூட்டத்துக்கான தலத்துக்கு பொருள்விளக்குனர் பயணம் செய்யத்தேவையில்லை என்பதால், இதற்கான கட்டணமும் தொடர்ச்சியான பொருள்விளக்கத்துக்கு ஆகும் கட்டணத்தை விட மிகவும் குறைவானதே ஆகும்.

வழித்துணைப் பொருள்விளக்கம்
வழித்துணைப் பொருள்விளக்கம் என்பது நாங்கள் உங்களுக்கோ, அல்லது ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் இருந்து – சிங்கப்பூருக்கோ அல்லது வேறு எந்த ஆசிய நாட்டுக்கோ, வணிகத்துக்கான அல்லது ஊர்சுற்றிப்பார்ப்பதற்கான உல்லாசப் பயணத்தை மேற்கொள்ளும் உங்களுடைய விருந்தினருக்கோ, நாங்கள் வழங்கும் பொருள்விளக்கச் சேவை ஆகும்.

எங்களுடைய சிறப்புத்தன்மை மிக்க, பொருள்விளக்கச் சேவை குறித்த இலவச விலைப்புள்ளி ஒன்றைப் பெற இங்கே கிளிக்செய்யுங்கள் அல்லது +65 6570 6028 என்ற எண்ணில் எங்களை அழையுங்கள்.

< மீ ண்டும் எங்களுடைய சேவைக >< மீ ண்டும் மல சல்ல >