Raffles Translation - Offers translation services in Singapore and worldwide

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

சட்டம் தொடர்பான மொழிபெயர்ப்பு

மொழிபெயர்ப்புத் தொழில்துறையின் அனைத்துப் பாடப்பிரிவுகளிலும், சட்டப் பிரிவு கையாளுவதற்குக் கடினமான பிரிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இரு மொழிகளில் புலமை பெற்ற ஒவ்வொருவருக்கும் சட்டம் தொடர்பான மொழிபெயர்ப்பைச் செய்யக்கூடிய ஆற்றல் இருந்துவிட முடியாது என்பதே உண்மையாகும்; சட்டம் தொடர்பான பின்புலத்தைக் கொண்ட தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களால் மட்டுமே ஒரு தரம் மிக்க வேலையை உருவாக்க முடியும்.

சட்டம் தொடர்பான ஒரு மொழிபெயர்ப்பு முற்றிலும் சரியானதாக இருக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை ஒருபோதும் மிகையாக வலியுறுத்திவிட முடியாது. உங்களுடைய சட்டம் தொடர்பான ஆவணம் தவறாக மொழிபெயர்க்கப்படுவதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த சரியற்றதன்மையும் அல்லது தெளிவின்மையும் உங்கள் நிறுவனத்துக்குக் குழப்பத்தையும், விரக்தியையும், தேவையற்ற தாமதத்தையும், பெரிய இழப்புகளையும் கூட ஏற்படுத்திவிட முடியும்.

ராஃபிள்ஸ் மொழிபெயர்ப்பைப் பொருத்தவரை, சட்டம் தொடர்பான பல ஆவணங்களுக்கும், பத்திரங்களுக்கும், பன்மொழிச் சான்றளிக்கப்பட்ட உண்மையான மொழிபெயர்ப்பை நாங்கள் வழங்குகிறோம். சட்டம் தொடர்பான மொழிபெயர்ப்புகளின் தரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், எல்எல்.பி., எல்எல்.எம்., மற்றும் எல்எல்.டி. (ஜே.டி.) பட்டங்களைப் பெற்ற மொழிபெயர்ப்பாளர்களை மட்டுமே நாங்கள் பணிக்கமர்த்துகிறோம். அதே நேரத்தில், 5 வருடங்களுக்கும் அதிகமான நேரடியான மொழிபெயர்ப்பு அனுபவத்தைக் கொண்ட எங்களுடைய முழு-நேர அக (எங்களுடைய நிறுவனத்துக்குள்ளேயே பணிபுரிகின்ற) மொழிபெயர்ப்பாளர்களுக்கு, சட்டத்தின் அடிப்படை மூலக்கூறுகள், ஒப்பந்தச் சட்டம், நிறுவனச் சட்டம், டார்ட்ஸ் முதலான சட்டப்படிப்புகளை வழங்குவதன் மூலமாக, அவர்கள் சட்டம் தொடர்பான தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களாக ஆவதற்கான பயிற்சியை நாங்கள் அளிக்கிறோம்.

எங்களுடைய அனைத்து சட்டம் தொடர்பான மொழிபெயர்ப்பாளர்களும், சட்டம் தொடர்பான சிறப்புச் சொற்றொடர்களையும், சட்டக் கோட்பாடுகளையும், சட்டக் கொள்கைகளையும், சட்ட விதிமுறைகளையும் நன்கறிந்தவர்களாவார்கள். சட்டத் தொடர்புகளின் உட்குறிப்புகளை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

கூடுதலான சேவை
ஒரு சான்றுறுதி வழங்கும் அலுவலர் அல்லது ஒரு சட்ட ஆதரவுரைஞர் மூலமாக, சில அதிகாரிகள் மற்றும் அரசாங்க முகமைகளுக்கு தேவைப்படக்கூடிய ஒரு சான்றுறுதி, சட்டம் தொடர்பான ஒரு மொழிபெயர்ப்புக்கு வழங்கப்பெறுவதற்கான ஏற்பாட்டை உங்கள் சார்பாக செய்யவும் எங்களால் முடியும்.

நாங்கள் முக்கியமாகக் கையாளுகின்ற சட்டம் தொடர்பான ஆவணங்களில் பின்வருவன அடங்கும்:

உறுதிமொழிப் பத்திரங்கள்
நடுவர் தீர்ப்பு அளிப்புகள்
சங்கத்தின் நடைமுறை விதிகள்
துணைவிதிகள்
நீதிமன்றத் தீர்ப்புகள்
பதிப்புரிமைப் பிரகடனங்கள்
கூட்டு முயற்சி உடன்பாடுகள் & ஒப்பந்தங்கள்
சட்டங்கள், ஒழுங்குமுறைகள், விதிமுறைகள், மற்றும் விதிகள்
விருப்ப அறிவிப்புக் கடிதம்
கடன் ஒப்பந்தங்கள்
அடமான ஒப்பந்தங்கள்
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
சங்க அமைப்பு விதிக் குறிப்புகள்
காப்புரிமைகள்
செயலுரிமை அதிகாரப் பத்திரம்
வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் ஒப்பந்தங்கள்
குத்தகை ஒப்பந்தங்கள்
நற்சான்றிதழ் சான்று மற்றும் பிற உரிமை கோரிக்கை வழக்குப் பொருட்கள்
வணிகச்சின்ன விண்ணப்பங்கள்
அறக்கட்டளைப் பத்திரங்கள்
உயில்கள்
நீதிமன்றஅழைப்பாணைகள

எங்களுடைய சிறப்புத்தன்மை மிக்க, சட்டம் தொடர்பான மொழிபெயர்ப்பு குறித்த இலவச விலைப்புள்ளி ஒன்றைப் பெற இங்கே கிளிக்செய்யுங்கள் அல்லது +65 6570 6028 என்ற எண்ணில் எங்களை அழையுங்கள்.

< மீ ண்டும் மொழிபெயர்ப்புகள >< மீ ண்டும் மல சல்ல >