Raffles Translation - Offers translation services in Singapore and worldwide

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

நிதி தொடர்பான மொழிபெயர்ப்பு

நிதி தொடர்பான மொழிபெயர்ப்பு என்று வரும்போது, ராஃபிள்ஸ் மொழிபெயர்ப்பின் சேவையானது அதன் துல்லியம், வாணிக களத்திற்கு விரைவாக அனுப்புதல், தலையாய சிறப்புத்தன்மைகொண்ட வாடிக்கையாளரின் திருப்தி, கொடுக்கப்பட்ட வரவுசெலவு திட்டத்துக்கு உட்பட்டு ஒரு தரம் மிக்க வேலையை முடித்துக்கொடுக்கும் ஆற்றல் ஆகியவற்றுக்காகப் புகழ்வாய்ந்ததாகும். இங்கு, நிதி தொடர்பான மொழிபெயர்ப்பைப் பொருத்தவரை, தொழில்நுட்பரீதியான துல்லியம், வேறு எந்த மொழிபெயர்ப்பில் இருப்பதையும் விட விவாதிக்கத்தக்க அளவுக்கு மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. ஏனென்றால், ஒரு வாடிக்கையாளரின் வருவாய் தொடர்பான ஓட்டங்களை அது அழுத்தமாகப் பாதித்துவிடக்கூடும்.

ஒரு வாடிக்கையாளர், நிதி நிலை அறிக்கைகள், நிதி தொடர்பான செய்தியறிக்கைகள், தகவல் தொகுப்பேடுகள் முதலான அவரது நிதி தொடர்பான ஆவணங்களை மொழிபெயர்ப்பதில் ஒரு மொழிபெயர்ப்பு நிறுவனத்துக்கு இருக்கும் ஆற்றலைக் குறித்து எப்போதும் எச்சரிக்கையாக இருக்கிறார். ஏனென்றால், நிதிப்பிரிவு மொழிபெயர்ப்பை சில மொழிபெயர்ப்பாளர்களால் மட்டுமே ஒரு திருப்திகரமாக உருவாக்கமுடியும் என்னும் அளவுக்கு மிகவும் சிறப்புத்தன்மை மிக்கதும், அடிக்கடி மிகவும் தெளிவில்லாததாகக் கருதப்படுவதும் ஆகும். வாடிக்கையாளர், அவர் ஒப்பந்தத்தை யாருக்கு வழங்கப்போகிறார் என்று முடிவுசெய்வதற்கு முன்பாக, மொழிபெயர்ப்பு நிறுவனங்களைப் பரிசோதனை மொழிபெயர்ப்புக்காக அணுகுகிறார் என்னும் உண்மையே முடிவு குறித்து அவர்களுக்கு இருக்கும் அழுத்தமான கவலைகளைப் பற்றிய மிகச்சிறந்த அறிகுறி ஆகும்.

வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள், கணக்கிடுதல் நிறுவனங்கள், சொத்து நிர்வாக அமைப்புகள் முதலானவற்றுடன், பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அனுபவத்துடன், ராஃபிள்ஸ் மொழிபெயர்ப்பு இப்போது, வங்கி அமைப்புகள் மற்றும் வங்கியல்லாத அமைப்புகள் இரண்டுக்குமே நிதி தொடர்பான மொழிபெயர்ப்புச் சேவையை வழங்குவதில், சிங்கப்பூரின் முக்கியப் பங்களிப்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. நிறைந்த அளவில் கணக்கியல், பொருளாதாரம், நிதி, எம்பிஏ அல்லது மற்ற தொடர்புடைய புலங்களில் சிறப்புக் கல்வித்தகுதியுடைய, நிதி தொடர்பான மொழிபெயர்ப்பு மேதைகள் எங்களிடம் உள்ளதால், தொழில்துறையின் மிகவும் முழுமையான வாடிக்கையாளர் சேவையை வழங்கவும், எந்த நிதி தொடர்பான மற்றும் கணக்கிடுதல் ஆவணங்களையும் உயர்தரமான தொழில்முறைப் பாங்குடன் மொழிபெயர்ப்பதற்கான உங்களுடைய எந்த தேவைகளையும் பூர்த்திசெய்யவும் எங்களால் முடிகிறது.

மோசமான நிதி தொடர்பான மொழிபெயர்ப்பு உங்களுடைய நிதி தொடர்பான அம்சங்களை மோசமானவையாக ஆக்கிவிடக்கூடும் என்பதால், நிதி தொடர்பான உங்களுடைய ஆவணங்களை நன்றாக மொழிபெயர்ப்பதற்கு நிதித்துறை வல்லுனர்கள் இருந்தால் மட்டும் போதாது, அவற்றைச் சிறப்பான முறையில் திருத்துவதற்கு, நிதி தொடர்பான திருத்துனர்களும் தேவை என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள்.

நாங்கள் முக்கியமாகக் கையாளுகின்ற நிதி தொடர்பான ஆவணங்களில் பின்வருவன அடங்கும்:

வருடாந்திர அறிக்கைகள்
கணக்குப் புத்தகங்கள்
கணக்கிடுதல் விதிகளும், ஒழுங்குமுறைகளும்
சொத்து மதிப்பீட்டு அறிக்கைகள்
தணிக்கையாளரின் அறிக்கைகள்
நிதி தொடர்பான கணக்கிடுதல்
நிதி தொடர்பான உண்மைத் தாள்கள்
நிதி நிலை அறிக்கைகள்
நிதி தொடர்பான தயாரிப்புப் பொருட்கள்
இணைத்தல்கள் மற்றும் கையகப்படுத்துதல்கள்
மாதாந்திர நிதியறிக்கைகள்
காப்பீட்டுக் கொள்கைகள்
காப்பீட்டுக் கேட்புரிமை அறிக்கைகள்
முதலீட்டாளர் நிகழ்நிலைப்படுத்துதல்கள்
ஐபிஓ விளம்பரங்கள்
ஐபிஓ தகவல் தொகுப்பேடுகள்
முதலீடு தொடர்பான எழுத்தாக்கங்கள்

எங்களுடைய சிறப்புத்தன்மை மிக்க, நிதி தொடர்பான மொழிபெயர்ப்பு குறித்த இலவச விலைப்புள்ளி ஒன்றைப் பெற இங்கே கிளிக்செய்யுங்கள் அல்லது 65 6570 6028 என்ற எண்ணில் எங்களை அழையுங்கள்.

< மீ ண்டும் மொழிபெயர்ப்புகள >< மீ ண்டும் மல சல்ல >