Raffles Translation - Offers translation services in Singapore and worldwide

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு

ஒரு சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு என்பது சட்டரீதியான அல்லது குடிநுழைவுக்கான காரணங்களுக்காக, அதிகாரபூர்வமான அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பதற்காக, ஒரு மொழிபெயர்ப்பு நிறுவனத்தாலோ அல்லது ஒரு சான்றுறுதி வழங்கும் அலுவலராலோ, சான்றளிக்கப்படுதல் அல்லது சான்றுறுதி வழங்கப்படுதல் தேவைப்படுகின்ற மொழிபெயர்ப்பைக் குறிக்கிறது.

சிங்கப்பூரில் உள்ள முன்னணி மொழிபெயர்ப்பு நிறுவனங்களில் ஒன்று என்ற முறையில், நாங்கள் மொழிபெயர்த்திருப்பவற்றுக்குச் சான்றளிப்பதற்கான ஆற்றலைக் கொண்டிருக்கும் தனித்துவ நிலைப்பாடு எங்களிடம் உள்ளது. மோசடி செய்யப்படுவதற்கான சாத்தியத்தைக் குறைப்பதற்குப் பல உத்திகளைக் கடைப்பிடிப்பதன் மூலமாக, சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்புக்கான நியமங்களை நாங்கள் பின்பற்றுகிறோம். அவற்றின் சட்டப்பூர்வமான துல்லியத்துக்கும், பயன்பாட்டுக்கும் உத்தரவாதம் அளிக்கிறோம். ஒரு ஆவணம், ராஃபிள்ஸ் மொழிபெயர்ப்பு நிறுவனம் மூலமாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, எங்களுடைய “சான்றளிக்கப்பட்ட உண்மையான மொழிபெயர்ப்பு” என்னும் முத்திரையும், பொறுப்பை ஏற்றிருக்கும் நபரின் கையெழுத்தும் பதிக்கப்பட்டுச் சான்றளிக்கப்பட்ட பிறகு, சிங்கப்பூர் அரசாங்கம் அல்லது தூதரகங்கள், பல்கலைக்கழகங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், நீதிமன்றங்கள் முதலான அதிகாரபூர்வமான மற்றும் அதிகாரபூர்வமல்லாத அமைப்புகளால் செல்லத்தக்கதாக ஏற்றுக்கொள்ளப்படும்.

சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்படும்போது, எங்களுடைய தரக்கட்டுப்பாட்டுச் செயல்முறை கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ராஃபிள்ஸ் மொழிபெயர்ப்பு மூலமாகச் சான்றளிக்கப்படுவதற்கு முன்பாக, அனைத்து மொழிபெயர்ப்புகளும், இரண்டாவது மற்றும் மூன்றாவது மொழிபெயர்ப்பாளரால் திருத்தப்பட்டு, பிழைதிருத்தப்பட்டு, அதன் பிறகு எங்களுடைய தர உறுதி மேலாளரால் மீளாய்வு செய்யப்படவேண்டும் என்பது அதன் பொருள் ஆகும்.

நாங்கள் முக்கியமாகக் கையாளுகின்ற சான்றளிக்கப்பட்ட ஆவணங்களில் பின்வருவன அடங்கும்:

தத்தெடுத்தல் ஆவணங்கள்
உறுதிமொழிப் பத்திரங்கள்
ஒப்பந்தங்கள்
பிறப்பு / திருமணம் / விவாகரத்து / மரணச் சான்றிதழ்கள்
சுங்கவரி ஆவணங்கள்
பட்டயங்கள், பள்ளி ஆவணங்கள், பட்டச் சான்றிதழ்கள்
பட்டமளிப்புச் சான்றிதழ்கள்
அடையாள அட்டை
குடிநுழைவு மற்றும் குடிஉரிமை வழங்குதல் ஆவணங்கள்
உரிமங்கள்
மருத்துவ/ மருத்துவமனை அனுமதிச் சான்றிதழ்கள்
கடவுச்சீட்டுகள்/பாஸ்போர்ட்டுகள்
நிரந்தர வசிப்புச் சிற்றேடுகள்
காவல்துறை அறிக்கைகள்
செயலுரிமை அதிகாரப் பத்திரங்கள்
சொத்து ஆவணங்கள், வீடு நில உடைமைப் பத்திரங்கள்
பரிந்துரைக் கடிதங்கள்
தந்திமுறை இடமாற்றங்களுக்கான உறுதிச்சீட்டுகள்
வரி செலுத்துதல் பதிவேடுகள்
வணிகச்சின்னங்களுக்கான பதிவுகள்
வாட் விவரப்பட்டியல்கள்

எங்களுடைய சிறப்புத்தன்மை மிக்க, சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு குறித்த இலவச விலைப்புள்ளி ஒன்றைப் பெற இங்கே கிளிக்செய்யுங்கள் அல்லது +65 6570 6028 என்ற எண்ணில் எங்களை அழையுங்கள்.

< மீ ண்டும் மொழிபெயர்ப்புகள >< மீ ண்டும் மல சல்ல >