Raffles Translation - Offers translation services in Singapore and worldwide

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


எங்களைப் பற்றி

சிங்கப்பூரில் நிபுணத்துவ மொழிசேவை வழங்கும் ராஃபிள்ஸ் மொழிபெயர்ப்பு சேவைகள் (“ராஃபிள்ஸ் மொழிபெயர்ப்பு”) 1999- ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, 1891-ல் தாமஸ் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸ் அவர்கள், நவீன சிங்கப்பூரைக் தோற்றுவித்ததின் 180-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக இந்நிறுவனம் அமைக்கப்பட்டது. எங்கள் மற்ற வாடிக்கையாளர்களான ராஃபிள்ஸ் ஹோட்டல், ராஃபிள்ஸ் மருத்துவமனை, ராஃபிள்ஸ் கிளப் போலவே இதற்கும் ராஃபிள்ஸ் என்று பெயரிடப்பட்டது. ஏனென்றால் சிங்கப்பூரில் உயர்வு, தரம், முதல் தரம் என்பதன் மறுபெயர் ராஃபிள்ஸ் ஆகும்.

மொழிபெயர்ப்புத் துறையில் தலைச் சிறந்த குழுவாக பணியாற்றும் நாங்கள், மலாய், தமிழ், இந்தோனேஷியன், டாகலாக், வியட்னாமீஸ், பர்மீஸ், வங்காளம், தாய், கம்போடியன், லாவோ, ஜப்பான், கொரியன் மற்றும் சைனீஸ் ஆகிய மொழிகளில் ஒருபுறமும், ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியன், ஸ்பேனிஷ், போர்த்துகீசியம், டேனிஷ், டச்சு, இரஷ்யன், உக்ரேனியன், கிரீக், டர்கிஷ், நார்வேஜியன், ஃபின்னிஷ், இலத்தீன், போலிஷ், லாட்வியன், குரோவேஷியன், செக், ஐரிஷ் மட்டுமல்லாது அனைத்து ஆசிய மற்றும் ஐரோப்பிய மொழிகளிலும் தரமான மொழிபெயர்ப்பு மற்றும் பொருள் விளக்கச் சேவைகளை வழங்குகிறோம்.Raffles Statue

மொழிபெயர்ப்புகள் (நிதி தொடர்பான மொழிபெயர்ப்பு, சட்டம் தொடர்பான மொழிபெயர்ப்பு, உயிரியல் தொடர்பான மொழிபெயர்ப்பு, தொழில்நுட்பம் தொடர்பான மொழிபெயர்ப்பு, வணிகம் தொடர்பான மொழிபெயர்ப்பு, கப்பல் வணிகம்/எண்ணெய் தொடர்பான மொழிபெயர்ப்பு, சீன இலக்கியம் தொடர்பான மொழிபெயர்ப்பு, சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு), பொருள்விளக்கச் சேவை, இணையதளத்தை இடத்துக்கேற்றதாக்குதல், திருத்துதல், பிழைதிருத்துதல், நகல்முறையில் எழுதுதல், டி.டி,பி. (டைப்செட்டிங்), ஒலிப்புக்கேற்ப எழுதுதல் முதலானவற்றில், பெரியதாக இருந்தாலும், சிறியதாக இருந்தாலும், ஒவ்வொரு திட்டப்பணிக்கும் நாங்கள் அந்தந்த நாட்டிற்கேற்ற ஒரு குழுவை அமைக்கிறோம்.

அங்கீகாரம்பெற்ற முழுநேரப் பணியாற்றுகின்ற, தாய்மொழியில் மொழிபெயர்க்கின்ற, எங்களுடைய அனைத்து மொழிபெயர்ப்பாளர்களும்/ பொருள்விளக்குனர்களும் குறிப்பிட்ட ஒரு கல்வித்துறையில் சிறப்புப்பயிற்சி பெற்றவர்கள் ஆவர். எந்த வகையான ஆவணத்தை அல்லது தரவை நீங்கள் மொழிபெயர்க்க விரும்பினாலும், உங்களுடைய குறிப்பிட்ட தேவைகளை நிறைவுசெய்யும் விதத்தில் ராஃபிள்ஸ் மொழிபெயர்ப்பு எப்போதுமே வாடிக்கையாளரின் விருப்பத்துக்கேற்ற சேவையை வழங்கக்கூடிய ஆற்றலைப் பெற்றுள்ளது.

ராஃபிள்ஸ் மொழிபெயர்ப்பை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்றால் நீங்கள் வேறெங்கும் பெறமுடியாத உன்னதமான தரத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று பொருளாகும். பரிசோதிக்கப்பட்ட, நம்பகமான எங்கள் அமைப்பின் மூலமாக இதற்கான உறுதி உங்களுக்கு அளிக்கப்படுகிறது. இலவச விலைப்புள்ளிகளைப் பெற இங்கே கிளிக்செய்யுங்கள், எங்களுடைய அங்கீகாரம்பெற்ற, அனுபவம் வாய்ந்த தொழில்முறையாளர்களின் குழுவிடம் இருந்து நிபுணத்துவம் மிக்க மொழிபெயர்ப்பைப் பெறுவதை எதிர்நோக்கியிருங்கள்.


எங்கள் நோக்கம்

உலகம் முழுவதும் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் நன்மைக்காக வாடிக்கையாளரின் விருப்பத்துக்கேற்ற, மதிப்பு கூட்டப்பட்ட, மொழிபெயர்ப்பு, பொருள்விளக்கம் மற்றும் இடத்துக்கேற்றதாக்குதல் சேவைகளை வழங்குவதன் மூலமாக, உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாகத் தனித்துவம் பெறுதல்.

எங்கள் தன்னேற்புத் திட்டம்
மிகவும் குறைவான முடித்துக்கொடுத்தல் நேரத்தில், மிகவும் சகாயமான கட்டணத்தில், வாடிக்கையாளரின் விருப்பத்துக்கேற்ற, உயர்வான, மொழிபெயர்ப்பு, பொருள்விளக்கம் மற்றும் இடத்துக்கேற்றதாக்குதல் சேவைகளை வழங்குவதன் மூலமாக எங்களுடைய வாடிக்கையாளர்களின் வணிகத்தின் மதிப்பைக் கூட்டுவதற்கு நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம்.

மிக உயர்ந்த அளவிலான நம்பிக்கையையும், விசுவாசத்தையும் எங்களுடைய வாடிக்கையாளர்கள் இடையே தொடர்ந்து நிலைநாட்டி வருவதன் மூலமாக, அவர்களுடன் ஒரு நீண்டகால வணிகக் கூட்டாண்மையை வளர்த்துக்கொள்வதே எங்களுடைய முக்கியமான குறிக்கோளாகும்.

அத்துடன் கூடுதலாக, மொழிபெயர்ப்புத் துறைக்கு ஓர் உயர்வான தரநிலையை உருவாக்குவதற்கான முயற்சிகளை உத்வேகத்துடன் மேற்கொள்ள நாங்கள் ஆயத்தமாக உள்ளோம்.

எங்களுடைய அடிப்படை கோட்பாடுகள்
ராஃபிள்ஸ் மொழிபெயர்ப்புச் சேவைகளைப் பொருத்தவரை, எங்களுடைய விட்டுக்கொடுக்கமுடியாத அடிப்படை கோட்பாடுகளின் துணையுடன் கூடிய “தொழில்முறைப்பண்புகளை” வலியுறுத்துவதன் மூலமாக, மொழிபெயர்ப்பில் தலையாய சிறப்புத்தன்மையையும், நம்பகத்தன்மையையும் வழங்குவதற்கு நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம்.

எப்போதும் முழுமைக்கான முயற்சி
இந்த உலகத்தில் எதுவுமே முழுமையானதல்ல என்பதை நாங்கள் புரிந்துவைத்திருந்தாலும், நாங்கள் எதைச் செய்தாலும், அதில் எல்லா நேரங்களிலும் முழுமைக்கான முயற்சியுடன் செயல்படுவதற்கு இன்னும் கடப்பாடு கொண்டுள்ளோம். ஏனென்றால், நம்பிக்கையை உருவாக்குவதற்கு பல வருடங்கள் ஆகும் ஆனால் அதனை அழிப்பதற்கு சில நொடிகளே போதும் என்பதை நாங்கள் புரிந்துவைத்திருக்கிறோம். ஒருமுறை கூட, பிழைகளும், தவறுகளும் நேரிடுவதற்கு நாங்கள் அனுமதிப்பதில்லை என்பது எங்களின் நற்பண்புகள் விதித்திருக்கும் நடைமுறையாகும். எங்கள் வணிகத்தின் உயிர்மூச்சு அம்சமாக இருக்கும் இதனையே நாங்கள் முழுமையான தரத்துக்கான உறுதியளித்தல் (TQA) என்று அழைக்கிறோம். ராஃபிள்ஸ் மொழிபெயர்ப்பு -ஐப் பொருத்தவரை, எங்களுடைய வாடிக்கையாளர்களின் எதிப்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யும்வகையிலும், அதற்கும் மேலான சேவையை வழங்கும்வகையிலும், பெரியதாக இருந்தாலும், சிறியதாக இருந்தாலும், ஒவ்வொரு திட்டப்பணிக்கும் ஒரு தரக் கட்டுப்பாட்டுச் செயல்முறையை கடுமையாக நடைமுறைப்படுத்தவதன் மூலமாகச் சிறப்பான மொழிபெயர்ப்புச் சேவையை வழங்குவதற்கு நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம்.

மக்களை முக்கியமாக கருதும் குழுப்பணி
மக்களே எங்களது மிகவும் முக்கியமான பலமாக இருக்கிறார்கள். எங்களது சேவையின் முதுகெலும்பாக இருப்பதன் மூலமாக, எங்கள் வணிகத்தின் தரத்துக்கும், வெற்றிக்கும் அவர்கள் உத்தரவாதம் அளிக்கிறார்கள். தங்ககளது துறையில் சிறந்து விளங்கும் தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களைப் பணியில் சேர்த்து, பயிற்சி அளித்து, அவர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கு நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம். மேலும், நாங்கள் குழுப்பணியின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். எங்களது அனைத்து ஊழியர்களையும் குழுவாகப் பணியாற்றும்படி ஊக்கப்படுத்துகிறோம்; குழுப்பணியால் மட்டுமே நீங்கள் எதிர்பார்க்கும் சிறப்பான விளைவுகளை உருவாக்கமுடியும் – பில் கேட்ஸ் சொன்னதைப்போல, முழுமையான தனிநபர் என்று ஒருவர் இருக்கமுடியாது; ஒரு முழுமையான குழு மட்டுமே இருக்கமுடியும்.

தனிப்பட்டவருக்கேற்ற தன்மை
ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அவரவருக்கே உரிய குறிப்பிட்ட அவசியங்களும், தேவைகளும் கொண்டவர்கள் ஆகையால், எங்களுடைய வாடிக்கையாளர் அடித்தள அமைப்பு பல்வேறு பிரிவுகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, நல்ல பயனை அளிக்கின்ற தொடர்புமுறையின் மூலமாக சாத்தியமாகக்கூடிய அதிகபட்ச கவனத்தை ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் வழங்குவதை நாங்கள் எப்போதும் உறுதிப்படுத்துகிறோம். நாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் தலையாய சிறப்புத்தன்மையைச் சாதிப்பதற்கான முயற்சியை எடுத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு, அவர்களுடைய குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக வாடிக்கையாளரின் விருப்பத்துக்கேற்றதாக உருவாக்கப்பட்ட, தொழில்முறையிலான கவனம் மிகுந்த சேவையை அளிப்பதற்கு நாங்கள் முன்னுரிமை வழங்கவும் செய்கிறோம். அதாவது, நாங்கள் எப்போதும், எங்களுடைய வாடிக்கையாளர்களின் விருப்பத்தை வேறு எதை விடவும் முக்கியமானதாகக் கருதுகிறோம். நாணயம், நேர்மை மற்றும் திறந்த-மனத்துடன் இருத்தல் ஆகியவற்றில் நாங்கள் உண்மையாகவே கவனம் செலுத்துகிறோம்.

சகாயமான கட்டணத்தையே விதிப்பது
கட்டணம், எப்போதுமே வாடிக்கையாளர்கள் மிகவும் அக்கறை காட்டும் அம்சமாக உள்ளது. சந்தையில் இருக்கும் மிகவும் சகாயமான கட்டணத்துக்கு அதிகமாகப் பணம்கொடுப்பதற்கு எவருமே விரும்புவதில்லை. ராஃபிள்ஸ் மொழிபெயர்ப்புச் சேவைகளைப் பொருத்தவரை, தரத்தையோ, திறமையையோ குறைத்துக்கொள்ளாமல், இருதரப்புக்கும் வெற்றியாக இருக்கும் வகையில், மிகவும் சகாயமான கட்டணத்தை மட்டுமே விதிப்பதற்கு நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம். விதிவிலக்கு எதுவும் இல்லாமல், உங்களது திட்டப்பணி எப்போதுமே சரியான முறையில், உரிய நேரத்தில், வரவுசெலவு திட்டத்துக்கு உட்பட்டு முடித்துக்கொடுக்கப்படும்.

எங்களுடைய அனைத்துப் பணிகளையும் இரகசியமாக கையாளுதல்
இணையவசதி, வேகமாக வளர்ச்சியடைந்து, பூகோள எல்லைகளை தேவையற்றதாக ஆக்கி, மொழிபெயர்ப்பு வணிகத்தில் மிகவும் அதிகமான புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளபோதும், வாடிக்கையாளர்களைப் பொருத்தவரை, அவர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களின் இரகசியத்தன்மை குறித்து கவலையடையவும் வைத்துள்ளது. ராஃபிள்ஸ் மொழிபெயர்ப்பைப் பொருத்தவரை, இந்த கவலையை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். வழங்கப்படும் அனைத்துத் தகவல்களையும் இரகசியமாக கையாளுவதற்கு முழுமையான மொத்தத் தொழில்முறை நெறிமுறைகளையும் பராமரிப்பதற்கான உத்தரவாதத்தை நாங்கள் வழங்குகிறோம்.

சிங்கப்பூரின் கடுமையான சட்ட அமைப்பு உத்தரவாதம் அளிக்கும் வகையில் உங்கள் இரகசியத்தன்மையைப் பாதுகாக்கின்ற ஒரு நிறுவனம் என்ற முறையில், எங்கள் நிறுவனத்தின் மீது நீங்கள் முழுமையான பொறுப்பையும், நம்பிக்கையையும் கொள்வதற்கு ஏதுவாக, எங்களுடைய வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் மனநிம்மதியை அளிப்பதற்காக, வெளிப்படுத்தாமல் இருத்தல் ஒப்பந்தம் (NDA)ஒன்றில் கையெழுத்திடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

எங்களுடன் வெளிப்படுத்தாமல் இருத்தல் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள, எங்களுடைய நியமமான ஆவணத்தை இங்கு பதிவிறக்கம் செய்யுங்கள். அதன் உள்ளடக்கத்தைப் படித்து, உங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் தேதியைப் பூர்த்திசெய்து, ஆவணத்தின் அசல் மற்றும் நகலில் கையெழுத்திட்டு, எங்கள் கையெழுத்தைப் பெறுவதற்காக info@rafflestranslation.com.sg என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். அவற்றைப் பெற்றதும், உடனடியாக அவற்றில் கையெழுத்திட்டு, அதன் பிரதி ஒன்றை மின்னஞ்சல் மூலமாகவும், மூல ஆவணத்தை அஞ்சல் மூலமாகவும் நாங்கள் உங்களுக்கு அனுப்பிவைப்போம். அதற்குப் பிறகு, விலைப்புள்ளிகளைப் பெறுவதற்காக உங்கள் ஆவணங்களை எங்களுக்குப் பாதுகாப்பான உணர்வுடன் நீங்கள் அனுப்பலாம்.

எங்களுடைய இணையதளத்தை நீங்கள் பயன்படுத்தும்போது, எங்களுடைய அந்தரங்கக்காப்புக் கொள்கை யின்படி, உங்கள் அந்தரங்கம் மதிக்கப்படுவதற்கும், பாதுகாக்கப்படுவதற்குமான உறுதி உங்களுக்கு அளிக்கப்படுகிறது. .

< மீ ண்டும் மல சல்ல >